search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையம்
    X
    சென்னை விமான நிலையம்

    ஒமிக்ரான் தொற்று- 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு 8 நாள் வீட்டு தனிமை கட்டாயம்

    இந்தியாவுக்குள் ஒமிக்ரான் வைரஸ் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆலோசனைகள் வழங்கி உள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதை கட்டுப்படுத்த மருத்துவத்துறை போராடிய போது ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பினாஸ் என்று உருமாற்றம் அடைந்து பரவியது. அதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசிகளும் வந்துவிட்டன. 

    இந்த நிலையில் இப்போது புதிதாக உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வகை வைரஸ் அதிக வீரியத்துடன் உள்ளது. இதற்கு முன்பு பரவிய கொரோனாவைவிட கூடுதல் பாதிப்பை ஏற்படுத் தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தடுப்பூசிக்கு கட்டுப்படுமா? என்பது பற்றி ஆய்வுகள் நடந்து வருகிறது.

    இந்தியாவுக்குள் இந்த வைரஸ் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆலோசனைகள் வழங்கி உள்ளது. நாடு முழுவதும் சர்வதேச விமான நிலையங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    இது தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    புதியவகை வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்கா வில் 66 பேருக்கும், வாரங்காங்கில் 6 பேருக்கும், போட்ஸ்வானாவில் 2 பேருக்கும், இத்தாலியில் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூர், மலேசியா, பிரேசில், நியூசிலாந்து, இஸ்ரேல் உள்பட மொத்தம் 12 நாடுகளில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அந்த நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 2 தவணை தடுப்பூசி போட்டிருந்தாலும் அவர்களுக்கு பரிசோதனை கட்டாயம். அத்துடன் அவர்கள் 8 நாட்கள் வீட்டுத்தனிமையிலும் வைகப்படுவார்கள். அதன் பிறகு பரிசோதித்து கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களிலும் ஒரு உதவி திட்ட அதிகாரி தலைமையில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

    இந்த வைரசை நினைத்து பயம் கொள்ள தேவையில்லை. தமிழத்தை பொருத்தவரை உருமாற்றம் அடையும் கொரோனா வைரசையும் பகுப்பாய்வு செய்து அதிகபட்சம் 7 நாட்களில் கண்டு பிடிக்கும் வசதி உள்ளது. ரூ. 4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை தமிழகத்தில் பரவியதில் 90 சதவீதம் டெல்டா வகை வைரஸ்தான். பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×