search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nissan"

    நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.


    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் 30 ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் மாடலை வாங்க இதுவரை சுமார் 72 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில், மேக்னைட் எஸ்.யு.வி. மாடலின் 30 ஆயிரத்து யூனிட்டை நிசான் நிறுவன மூத்த அதிகாரி குயிலாம் கார்டியர் வாடிக்கையாளரிடம் வழங்கினார். நிசான் மேக்னைட் மாடல் சி.எம்.எப். ஏ பிளஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

     நிசான் மேக்னைட்

    இந்த பிரிவில் மிகவும் எடை குறைந்த கார் என்ற போதிலும் நிசான் மேக்னைட் ஏ.எஸ்.இ.ஏ.என். என்.சி.ஏ.பி. பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியது. நிசான் மேக்னைட் மாடல் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    2019 ஐந்து ஆண்டுகள் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் என்ற விருதினை நிசான் நிறுவனத்தின் லீஃப் எலெக்ட்ரிக் கார் வென்றுள்ளது. #NissanLeaf #ElectricCar



    நிசான் நிறுவனத்தின் பிரபல எலெக்ட்ரிக் கார் மாடலான லீஃப் அமெரிக்காவில் 2019 ஐந்து ஆண்டுகள் விலை குறைந்த எலெக்ட்ரிக் கார் என்ற விருதை வென்றிருக்கிறது.

    நிசான் நிறுவனத்தின் பேட்டரியில் இயங்கும் லீஃப் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத காராக இது திகழ்கிறது.

    கடந்த டிசம்பர் மாதமே இந்த பேட்டரி கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. நிசான் நிறுவனத்தின் தயாரிப்புகளில் சர்வதேச அளவில் பிரபல மாடலாக திகழ்வதால் இந்த மாடல் கார் இதுவரை 38 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    ஆசிய நாடுகள் மற்றும் அண்டை நாடான பூடானிலும் இது அறிமுகமாகி பலரது பாராட்டுதலை நிசான் லீஃப் பெற்றுள்ளது. இது சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. இந்த கார் இந்தியாவில் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் என்றே தெரிகிறது.



    இந்தியாவில் நிசான் லீஃப் காரின் விலை ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். இந்தியாவில் இந்த மாடலின் இரண்டாம் தலைமுறை கார் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    பேட்டரி காரை 2010-ம் ஆண்டில் நிசான் அறிமுகம் செய்த போதிலும் அதில் இரண்டாம் தலைமுறை காரை 7 ஆண்டுகள் கழித்தே வெளியிட்டது. இந்த மாடல் கார் 148 ஹெச்.பி. மற்றும் இ.எம்.57 எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டுள்ளது. இதில் 40 கிலோவாட் பேட்டரி உள்ளது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு முறை சார்ஜ் செய்த நிலையில் 380 கி.மீ. ஓடியது.

    இது முந்தைய மாடல் அதாவது முதல் தலைமுறை லீஃப் கார் ஓடிய தூரத்தைக் காட்டிலும் 129 கி.மீ. அதிகமாகும். இதில் விரைவான சார்ஜிங் (ஃபாஸ்ட் சார்ஜிங்) வசதியும் உள்ளதால் 40 நிமிடத்தில் 80 சதவீத அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.
    நிசான் இந்தியாவின் புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. கார் இன்னும் சில தினங்களில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இதன் விநியோக விவரங்கள் வெளியாகியுள்ளது. #NISSAN #NissanKicks
    நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி.க்கான முன்புதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. நிசான் கிக்ஸ் முன்பதிவு கட்டணம் ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. இம்மாத இறுதியிலேயே விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் ஏற்கனவே விற்பனையகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர புதிய காரை முன்பதிவு செய்வோரில் 500 பேருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நிசான் தேர்வு செய்யும் 500 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்க முடியும். எனினும் தேர்வு முறை மற்றும் இதர விதிமுறைகள் நிசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.



    ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

    இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய நிசான் கிக்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NissanKicks #Car

    இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. காரின் முன்பதிவு துவங்கியது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #NissanKicks



    நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது. நிசான் கிக்ஸ் முன்பதிவு கட்டணம் ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.



    பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுககு போட்டியாக அமையும். புதிய நிசான் கிஸ்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நிசான் நிறுவனம் கிக்ஸ் எஸ்.யு.வி. காரின் முன்பதிவு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. #NissanKicks



    நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் இந்தியாவில் டிசம்பர் 14ம் தேதி துவங்குகிறது. முன்னதாக இந்தியாவுக்கு என நிசான் கிக்ஸ் புது வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் காரின் நீளம் 89 எம்.எம். அளவு இருக்கிறது.

    நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.



    பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுககு போட்டியாக அமையும். புதிய நிசான் கிஸ்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஷ், டோக்கியோ போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Nissan #CarlosGhosn
    டோக்கியோ:

    ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருபவர் கார்லோஸ் கோஷ். நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இவரை, விசாரணைக்கு பின்னர் டோக்கியோ போலீசார் நேற்று கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிதி முறைகேடு மற்றும் வருமானத்தை குறைத்து காட்டிய புகார் தொடர்பாக கார்லோஸ் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் ஜப்பானைச் சேர்ந்த என்.எச்.கே. வானொலியும் மற்றும் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

    நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்லோஸ் கோஷ், மீது கூறப்பட்ட புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரும், பிரதிநிதித்துவ இயக்குனர் கிரேக் கெல்லியும் நீண்ட காலமாக முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  #Nissan #CarlosGhosn
    நிசான் நிறுவனத்தின் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய கார்களின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Nissan #micra


    2018 நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகமானது. புதிய ஹேட்ச்பேக் மாடல்களில் அதிக சவுகரியமாகவும், பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. நிசான் மைக்ரா மாடலில் டூயல் ஏர்பேக் அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டேன்டர்டு அம்சமாக இருக்கிறது, எனினும் பேஸ் வேரியன்ட்-இல் ஏ.பி.எஸ். அம்சம் வழங்கப்படவில்லை.

    இத்துடன் பின்புறம் பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 2018 நிசான் மைக்ரா மாடலில் 6.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மிரர்லின்க் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை, 2018 நிசான் மைக்ரா மாடலில் இன்டிகேட்டர்களில் ORVM சேர்க்கப்பட்டு இருப்பதை தவிர எவ்வித அப்டேட்களும் செய்யப்படவில்லை.

    2018 நிசான் மைக்ரா ஆக்டிவ் மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கீலெஸ் என்ட்ரி, உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.



    புதிய நிசான் மைக்ரா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 76 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 104 என்.எம். டார்கியூ செயல்திறனும், பெட்ரோல் மோட்டார் 63 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 160 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இவற்றின் டிரான்ஸ்மிஷன்கள் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    2018 நிசான் மைக்ரா ஆக்டிவ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 104 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 2018 நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் மாடல்களின் விலை முறையே ரூ.6.19 லட்சம் மற்றும் ரூ.5.03 லட்சம் முதல் துவங்குகிறது. #Nissan #micra
    நிசான் மோட்டார் கம்பெனி நிறுவனம் ஒவ்வொரு ஆறு மாதங்களில் புதிய வாகனங்களை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
    சென்னை:

    பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான நிசான் மோட்டார் கம்பெனி ஒவ்வொரு ஆறு மாதங்களில் புதிய வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2022-ம் ஆண்டு வாக்கில் ஐந்து சதவிகித பங்குகளை அடையும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிசான் மற்றும் டேட்சன் பிரான்டுகளின் புதிய வாகனங்கள் இந்த பண்டிகை காலம் முதல் வெளியிடப்பட இருக்கிறது. இந்தியாவின் ஊரக பகுதிதளை குறிவைத்து ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் வெளியிட நிசான் திட்டமிட்டுள்ளது. இதுதவிர எஸ்யுவி மாடல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை வெளியிட இருக்கிறது.

    2022-ம் ஆண்டு வாக்கில் எட்டக்கூடிய இலக்கு என அந்நிறுவனத்தின் குஹல் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்டோமொபைல் சந்தையில் நிசான் மாடல் 1.6 சதவிகிதமாக இருக்கிறது. வரும் 12 முதல் 18 மாத காலத்தில் மேலும் ஒரு சதவிகித வரை அதிகரிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
    ×