search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nissan Kicks SUV"

    நிசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. #NissanKicks

    நசான் இந்தியா நிறுவனம் இந்தி்யாவில் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. கார் விலை ரூ.9.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளது.

    இந்தியாவில் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் முன்பதிவு செய்ய ரூ.25,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. இந்தியாவில் XL, XV, XV பிரீமியம் மற்றும் XV பிரீமியம் பிளஸ் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் XV பிரீமியம் பிளஸ் வேரியன்ட் விலை ரூ.14.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் விற்பனை செய்யப்படும் கிக்ஸ் எஸ்.யு.வி. இந்தியாவில் பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கின்றது. புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. கார் நிசான்-ரெனால்ட் பி0 ஃபிளாட்பாமில் உருவாகி இருக்கிறது.

    புதிய நிசான் கிக்ஸ் நான்கு வேரியன்ட்களிலும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்டோ டோர் லாக் / அன்லாக், பின்புற கேமரா / சென்சார்கள், என்ஜின் இம்மொபிலைசர், டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, இகோ மோட், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் H4K பெட்ரோல் என்ஜின் 106 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் K9K DCi டீசல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. கார் பியல் வைட், பிளேட் சில்வர், பிரான்ஸ் கிரே, ஆம்பெர் ஆரஞ்சு, டீப் புளு பியல், நைட் ஷேட், ஃபியர் ரெட், பியல் வைட்/ஆம்பெர் ஆரஞ்சு, பியல் வைட் / ஆனிக்ஸ் பிளாக், பிரான்ஸ் கிரே / ஆம்பெர் ஆரஞ்சு மற்றும் ஃபியர் ரெட் / ஆனிக்ஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. #NissanKicks #Car
    இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. காரின் முன்பதிவு துவங்கியது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #NissanKicks

    நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியது. நிசான் கிக்ஸ் முன்பதிவு கட்டணம் ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நிசான் டெரானோ, ரெனால்ட் டஸ்டர் மற்றும் கேப்டுர் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை நிசான் கிக்ஸ் கொண்டுள்ளது. உள்புறம் கேப்டுர் மாடலில் உள்ள அம்சங்கள் பெரும்பான்மையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடலில் அரவுன்ட் வியூ மானிட்டர் என அழைக்கப்படும் 360-டிகிரி கேமரா அருகில் உள்ள அசையும் பொருட்களை கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்திற்கென காரை சுற்றி மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் நிசான் கிக்ஸ் சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களுடன் நிசான் கிக்ஸ் கிடைக்கிறது. இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுல் அல்லது CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்தியாவில் புதிய நிசான் கிக்ஸ் கார் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 500 உள்ளிட்ட மாடல்களுககு போட்டியாக அமையும். புதிய நிசான் கிஸ்ஸ் இந்திய விலை ஜனவரி 2019 வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நிசான் நிறுவனம் கிக்ஸ் எஸ்.யு.வி. காரின் முன்பதிவு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. #NissanKicks

    நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் இந்தியாவில் டிசம்பர் 14ம் தேதி துவங்குகிறது. முன்னதாக இந்தியாவுக்கு என நிசான் கிக்ஸ் புது வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் காரின் நீளம் 89 எம்.எம். அளவு இருக்கிறது.

    ×