search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mitchell marsh"

    • மிட்செல் மார்ஷ்-க்கு பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    • கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்றது.

    ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், கணுக்காலில் ஏற்பட்ட வலி காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஒருநாள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    அடுத்த மாதம் இந்திய அணிக்கு எதிரான டி20 சுற்றுப்பயணத்தில் மிட்செல் மார்ஷ் கலந்து கொள்வார். அதனை தொடர்ந்து வரும் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்றது. இந்த வெற்றிக்கு 30 வயதான அவர் முக்கிய பங்காற்றினார். மேலும் இந்த ஆண்டு அவருக்காக பெரிய திட்டங்கள் உள்ளன. எனவே அவரை சரி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி புதன்கிழமை நாளை நடைபெறவுள்ளது.

    • டெல்லி தகுதி பெறாதது குறித்து அந்த அணியில் விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • மும்பை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது.

    கொழும்பு:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அந்த அணி 14 புள்ளிகள் எடுத்து 5-வது இடத்தை பிடித்தது.

    மும்பை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் தோற்று டெல்லி வெளியேறியது.

    இந்த நிலையில் டெல்லி தகுதி பெறாதது குறித்து அந்த அணியில் விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் (டெல்லி அணி) ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது அவமான கரமானது. இது வேதனை அளித்தது. ஐ.பி.எல். போட்டி தொடக்கத்தில் எனக்கு சிறிய காயம் ஏற்பட்டது. பிறகு ஒரு போட்டியில் விளை யாடினேன்.

    அப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சற்று நடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் மீண்டும் போட்டிகளில் விளை யாடியது மகிழ்ச்சியாக இருந்தது.

    நான் 3-வது வரிசையில் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். அதை 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது சிறந்த நிலைப்பாடு என்று நான் நிச்சயமாக உணர்கிறேன். மேலும் பவர்பிளேவில் பேட்டிங் செய்வதை விரும்பினேன். என்னால் 3-வது வரிசை யில் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும் என்று நம்புகிறேன்.

    சர்வதேச கிரிக்கெட் மிகவும் கடினமானது. உலகில் எந்த அணிக்கு எதிராக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் சாதிப்போம் என ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.
    “விராட் கோலி சிறந்த வீரர் என்பதை அறிவோம். அவரை கட்டுப்படுத்த நாங்கள் நிறைய திட்டங்கள் வைத்துள்ளோம். அதை களத்தில் சரியாக செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம். அவருக்கு மட்டுமல்ல, மற்ற இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இதே போல் யுக்திகளை வகுத்துள்ளோம். பேட்டிங்கில் அனுபவமற்ற அணி என்று எங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் உண்மைலேயே நல்ல நிலையில், நம்பிக்கையுடன் உள்ளோம். பேட்டிங்கில் ஒருங்கிணைந்து சாதிப்போம் என்று நம்புகிறேன்”.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஹசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் துணைக் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். #PAKvAUS
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டனாக டேவிட் வார்னரும் இருந்தனர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டின்போது இருவரும் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார்கள்.

    இந்த புகாரை விசாரித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் தலா ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் கேப்டனாக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார். ஆனால் துணைக் கேப்டன் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை.


    டிம் பெய்ன்

    ஆஸ்திரேலியா அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டன் பதவிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் மற்றும் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளின் கேப்டன்களாக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி செப்டம்பர், ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. முதலில் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

    இதற்கான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அஷ்டோன் அகர், உஸ்மான் கவாஜா, மேத்யூ ரென்ஷா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    அதன்பின் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் கேப்டனாக டிராவிஸ் ஹெட் நியமிக்கப்பட்டுள்ளார்.


    டிராவிஸ் ஹெட்

    இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ‘ஏ’ அணியில் முன்னணி வீரர்களை களமிறக்கியுள்ளது ஆஸ்திரேலியா.
    ×