search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meteorological Centre"

    • மே 28-ந்தேதி வரை அக்னி வெயில் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும்.
    • வங்கக்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி வளி மண்டலத்தில் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. மே 28-ந்தேதி வரை அக்னி வெயில் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும்.

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோடை மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 7-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயலின் தாக்கம் முடிந்த பிறகு வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் பி.செந்தாமரைகண்ணா கூறியதாவது:-

    வங்கக்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி வளி மண்டலத்தில் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால் 7-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. 8-ந்தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பிறகு 9-ந்தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது வடக்கே மத்திய வங்கக்கடலை நோக்கி நகரும்போது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் பாதை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச கடற்கரையை ஒட்டி இருக்கும்.

    தமிழகத்தை பொறுத்தவரை மழையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. எனவே மழை குறைய வாய்ப்புள்ளது. இந்த புயலின் தாக்கமானது வங்கக் கடலில் நிலவி வரும் ஈரப்பதம் முழுவதையும் இழந்துவிடும். இதனால் வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கு மத்தியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் பீதர், கலபுரகி, யாதகிரி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, சிவமொக்கா, மைசூரு, துமகூரு மாவட்டங்களில் சாரல் மழையும், பெங்களூரு, ஹாசன், கோலார் மாவட்டங்களில் வருகிற 30-ந் தேதி வரை மழை பெய்யும். எனவே இந்த மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
    • 27, 28-ந் தேதியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

    மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கி.மீ. வரை பலத்த காற்றுடன் லேசான மழை பெய்யும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    25, 26-ந்தேதியில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் 27, 28-ந் தேதியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கலியநல்லூர், மக்கினாம்பட்டி (கோவை) தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. கிண்ணக்கொரை, பொன்னியாறு, கெட்டி தலா 8 செ.மீ, காட்டுமயிலூர், பொள்ளாச்சி, மணப்பாறை, ஜமுனாமாத்தூர் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
    • சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொமுகி அணை (கள்ளக்குறிச்சி) 13 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    23, 24, 25ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் பகலில் கடுமையான வெயிலும் அதிகாலையில் குளிரும் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் இப்போதே வாடி வதங்கும் நிலை உள்ளது.

    ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சகட்டத்தை அடையும்போது மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படக்கூடும்.

    இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது.

    பெரம்பூர், மூலக்கடை, நுங்கம்பாக்கம், தி.நகர், அடையாறு, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பகலில் திடீரென மழை பெய்தது. பெருங்குடி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதியிலும் கோடை மழை வெளுத்து வாங்கியது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது.

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 20-ந் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்ற வானிலை அறிவிப்பை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

    முகலிவாக்கம், கோடம்பாக்கம், சென்னை விமான நிலையத்தில் தலா 7 செ.மீ., ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 22-ந் தேதி வரை இடி மின்னலுடன் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • வரும் 21ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 21ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்றும் நாளையும் ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதல் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் தானியங்கி மழை அளவீடுகள் மற்றும் வானிலை நிலையங்களை நிறுவ புதிய இடங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.
    • சென்னையில் 12 தானியங்கி மழை மானியும், தானியங்கி வானிலை நிலையமும் உள்ளன.

    சென்னை:

    சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனம் வானிலை முன் அறிவிப்பை தெளிவாக கணக்கிட்டு துல்லியமாக வெளியிட பல்வேறு தொழில்நுட்பங்களை பின்பற்றுகிறது. மேலும் துல்லியமாக கணக்கிட அதன் கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் தானியங்கி மழை அளவீடுகள் மற்றும் வானிலை நிலையங்களை நிறுவ புதிய இடங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    சென்னையில் 12 தானியங்கி மழை மானியும், தானியங்கி வானிலை நிலையமும் உள்ளன. இதுபோல் நகர்ப்புறங்களில் கூடுதல் நிலையங்களை அமைப்பதன் மூலம் நகர்ப் பகுதிகளில் பிரத்யேகமாக வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறிய உதவும்.

    இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் கூறியதாவது:

    வானிலை முன்அறிவிப்பு நுட்பங்களை மேம்படுத்தவும் ரேடார் தரவுகளை பகுப்பாய்வு செய்யவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரத்தால் குறுகிய நேரத்தில் முன் அறிவிப்பு கணிப்புகளை இப்போது உள்ளதை விட மேம்படுத்த முடியும்.

    வானிலை முன் அறிவிப்பு முன்பு வட தமிழகம், தென் தமிழகம், மாவட்ட அளவில் கணித்து கூறப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் எந்த பகுதியில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்பதை கணித்து கூற முடியும்.

    இந்த புதிய தொழில் நுட்பம் கடந்த ஆண்டு சென்னையில் நடை முறைப்படுத்தப் பட்டது.

    ரேடார் புள்ளி விவர தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரங்களில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பதை துல்லியமாக முன் அறிவிப்பு செய்ய முடியும்.

    மற்ற மாவட்டங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்துகிறோம். தற்போது சென்னையில் 2 ரேடாரும், காரைக்காலில் ஒரு ரேடாரும் உள்ளன. தமிழக அரசு சார்பில் சேலம், ராமநாதபுரத்தில் 2 ரேடார்களை அமைக்க உள்ளது.

    இனி வரும் காலங்களில் எந்த பகுதியில் மேகம், இடி, மின்னல் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அது எந்த பக்கம் நகர்ந்து சென்று மழையை தரும் என்பதை துல்லியமாக கூறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 2, 3-ந்தேதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.
    • தென்தமிழக மாவட்டங்களில் சனிக்கிழமை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரிக்கடல் பகுதிகளில் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அந்த நாட்களில் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 2, 3-ந்தேதிகளில் வறண்ட வானிலை காணப்படும். மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் சனிக்கிழமை (மார்ச் 4) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    • தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும்.
    • அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும்.

    சென்னை:

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    * தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும்.

    * தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 27, 28 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * வரும் மார்ச் 1ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    * அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26-ந் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை காணப்படும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 48 மணிநேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26-ந் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை காணப்படும்.

    27, 28-ந்தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 48 மணிநேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×