search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant murder"

    கமுதியில் வீடு புகுந்து ஜவுளி வியாபாரியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது37). இவரது மனைவி பொன்னாத்தாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ஜெயராமன் மொபட்டில் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். 6 மாதத்துக்கு முன்பு கமுதி செட்டியார் பஜாரில் வாடகைக்கு கடை எடுத்து ஜவுளி விற்பனையை தொடங்கினார். அதே பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    வியாபாரம் முடிந்ததும் ஜெயராமன் நேற்று இரவு வீடு திரும்பினார். குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் அவர் கீழ்தளத்தில் தூங்கினார். பொன்னாத்தாளும், குழந்தைகளும் மாடியில் தூங்கினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த ஜெயராமன் கதவை திறந்தார். அப்போது திபுதிபுவென புகுந்த மர்ம கும்பல் ஜெயராமனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

    கணவரின் அலறல் சத்தம் கேட்டு பொன்னாத்தாள் வந்து பார்த்தபோது ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    ஜெயராமன் படுகொலை செய்யப்பட்டது குறித்து கமுதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.

    பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜெயராமன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஜெயராமன் கொலை செய்யப்பட்டதில் அவரது மனைவிக்கு தொடர்பு இருக்குமோ? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே பொன்னாத்தாளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

    படப்பை அருகே வியாபாரி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதுர்:

    படப்பையை அடுத்த நாவலூர் குடியிருப்பை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 58). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்தார். இவரது மகன் ரவிக்குமார்.

    நேற்று முன்தினம் சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பழனியப்பனையும், அவரது மகன் ரவிக்குமாரையும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், சதீஷ் தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ரவிக் குமாருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக படப்பை பகுதியில் பதுங்கியிருந்த பாண்டியன், சதீஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே இன்று அதிகாலை கோழிக்கடை வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சொர்ணமணி. இவரது மனைவி கலையரசி. இவர்களது மகன் உதயகுமார்(வயது 29). இவர் அக்கநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கோழிக்கடை நடத்தி வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாஷாதேவி என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு கனிஷ்காவும்(4), 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாஷாதேவி கணவரை பிரிந்து கோவில்பட்டி மந்திதோப்பில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து கனிஷ்கா உதயகுமாருடனும், மற்றொரு குழந்தை மாஷாதேவியுடனும் வசித்து வருகின்றனர். உதயகுமார் இரவில் கடை அருகிலேயே படுத்து தூங்கிவிடுவார். இதே போல் நேற்றும் கடையை அடைத்துவிட்டு கடை அருகில் தூங்கினார்.

    இதைத் தொடர்ந்து கணவன்-மனைவியை சேர்த்து வைக்க இது தொடர்பாக இரு வீட்டார் பெரியவர்களும் நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இன்று அதிகாலை உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உதயகுமார் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு திருஞானசம்பந்தர், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் பலியான உதயகுமார் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உதயகுமார் எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரை கொலை செய்தவர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் நிறுத்தம் அருகே வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×