search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melmaruvathur"

    மேல்மருவத்தூர் அருகே விபத்தில் டீக்கடைக்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் அடுத்து சோத்துப்பாக்கத்தில் இருந்து சித்தாமூருக்கு ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 5 பேர் இருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஷேர் ஆட்டோ மீது உரசியது.

    இதில் நிலை தடுமாறி ஓடிய ஆட்டோ எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தறிகெட்டு ஓடிய ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் மணிமாறன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான மதுரை மதுராந்தகத்தை அடுத்து அவுரிமேடு பகுதியை சேர்ந்தவர். டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோவிலுக்கு பக்தர்கள் கார்த்திகை மாதம் தொடங்கி சக்தி மாலை அணிந்து, அம்மனுக்கு இருமுடி எடுத்து செல்லும் விழா தொடங்கியது.
    மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவுக்கு முன்பாக கார்த்திகை மாதம் தொடங்கி சக்தி மாலை அணிந்து, அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான இருமுடி விழா இன்று தொடங்கி ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 21-ந் தேதி வரை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஏற்றும் தைப்பூச ஜோதி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    இருமுடி விழா இன்று அதிகாலை மங்கள இசையுடன் தொடங்கியது. காலை 5.45 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது.



    இதைத் தொடர்ந்து இருமுடி அபிஷேகத்தை லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். முதலில் 9 சிறுமிகளும், 9 தம்பதிகளும் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத் தலைவர் கோ.ப.செந்தில் குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் ஆன்மிக இயக்கத்தின் பல்வேறு குழுவினர் செய்திருந்தனர்.

    ×