search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medvedev"

    • ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் மோதினர்.
    • பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலீனா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் டேனியல் மெட்வெடேவ் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போடிக்வாண்டே-ராபின் ஹாஸ் இணை ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணையை எதிர் கொண்டது.

    இந்த ஆட்டத்தில் ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் போடிக்வாண்டே-ராபின் ஹாஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

     

    மேலும், பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா - கோகோ காப் இணை எலிஸ் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணையை எதிர்கொண்டது. இதில் எலிஸ் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலா - கோகோ காப் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

    • டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனே மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • முன்னணி வீரரான ஜோகோவிச் 3வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மான்டே கார்லோ:

    மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 2-வது காலிறுதி சுற்றில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.

    இதில் பிரிட்ஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.

    மற்றொரு காலிறுதியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனே, ரஷிய வீரர் மெத்வதேவுடன் மோதினார். இதில் ஹோல்ஜர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே 3வது சுற்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நடந்தது.
    • இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் இத்தாலி வீரர் சின்னரை வென்று கோப்பையை கைப்பற்றினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னரை சந்தித்தார்.

    இதில் மெத்வதேவ் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று, சாம்பியன் பட்டம் வென்றார்.

    • மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.
    • முதல் அரையிறுதியில் மெத்வதேவ் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் கரென் கச்சனாவை சந்தித்தார். இதில் மெத்வதேவ் முதல் செட்டை 7-6 என்ற செட் கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டை கச்சனாவ் 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றிய மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.
    • இதில் மெத்வதேவ், சின்னர் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபரை சந்தித்தார். இதில் மெத்வதேவ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், பின்லாந்து வீரர் எமில் ரூசோவுரியுடன் மோதினார். இதில் சின்னர் 6-3, 6-1 என்ற நேர்செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
    • இதில் மெத்வதேவை வீழ்த்திய அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் அல்காரஸ் அதிரடியாக ஆடினார். இதனால் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் இறுதிக்கு முன்னேறினர்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாஃபோவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் மெத்வதேவ் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் முதல் முறையாக இண்டியன்வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் டேவிடோவிச்

    போகினாவை சந்தித்தார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை மெத்வதேவ் 6-3 என எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார்.

    இதன்மூலம் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்ற மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் 2ம் சுற்றில் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ஆஸ்திரேலிய வீரர் நிக் கிரியாஸ் காயத்தால் போட்டியில் இருந்து விலகினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனுடம் மோதினார். இதில் 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வென்றார்.

    உலகின் 4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் ரிங்கி ஹிஜிகதாவை (ஆஸ்திரேலியா) வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் முதல் சுற்றில் நடால், ஸ்வியாடெக் வெற்றி பெற்றனர்.
    • ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா தோல்வியடைந்தார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் டேனில் மெத்வதேவ் (ரஷியா) தன்னை எதிர்த்த மார்கோஸ் கிரோனை (அமெரிக்கா) 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் பந்தாடினார்.

    4-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் குவான்டின் ஹேஸ்சை (பிரான்ஸ்) வெளியேறினார்.

    ஹர்காக்ஸ் (போலந்து), ஷபோவலோவ், அலியாசிம் (கனடா), ஜேனிக் சினெர் (இத்தாலி), பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), கேமரூன் நோரி (இங்கிலாந்து) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    முன்னாள் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7-6 (7-3), 3-6, 6-1, 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் மோல்கனிடம் (சுலோவேனியா) போராடி வீழ்ந்தார்.

    ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் நிக் கிரியாஸ் கால் முட்டி காயம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது.

    • கச்சனோவ் 4-வது சுற்றில் 4-6, 6-3, 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் பஸ்டாவை வீழ்த்தினார்.
    • ஆஸ்திரேலியாவை நிக் கிர்கியோஸ் 7-6 (13-11), 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா) 4-வது சுற்றில் சீனாவை சேர்ந்த ஷாங்சூயை எதிர்கொண்டார். இதில் கவூப் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

    கோகோ கவூப் கால் இறுதி ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) சந்திக்கிறார். கார்சியா 4-வது சுற்றில் 6-4 , 6-1 என்ற நேர் செட் கணக்கில் அலிசன் ரிஸ்கை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

    மற்றொரு ஆட்டத்தில் அஜ்லா டோமலிஜலோவிச் (ஆஸ்திரேலியா) 7-6 (10-8), 6-1 என்ற கணக்கில் லுட்மிலா சம்சோனாவை (ரஷிய) வீழ்த்தினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், தர வரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    ஆஸ்திரேலியாவை நிக் கிர்கியோஸ் 7-6 (13-11), 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். 23-வது வரிசையில் உள்ள அவர் கால் இறுதியில் ரஷியாவை சேர்ந்த கரென் கச்சனோவை எதிர்கொள்கிறார்.

    கச்சனோவ் 4-வது சுற்றில் 4-6, 6-3, 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் பஸ்டாவை வீழ்த்தினார்.

    5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) 6-1, 6-2, 6-7 (4-7), 6-2 என்ற கணக்கில் மவுட்டெட்டை (பிரான்ஸ்) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #AustralianOpen #Djokovic #Medvedev #Nishikori
    மெல்போர்ன்:

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 12-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அத்துடன் அவர் இந்த மாத இறுதி வரை நம்பர் ஒன் வீரராக நீடிப்பதை உறுதி செய்தார்.



    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-3, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ‘வைல்டு கார்டு’ வீரர் அலெக்ஸ் போல்ட்டை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 7-6 (8-6), 6-1, 6-2 என்ற நேர்செட்டில் போர்ச்சுகல் வீரர் ஜாவ் ஜோய்சாவை வெளியேற்றி 7-வது முறையாக 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் டானில் மெட்விடேவ் (ரஷியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாப்லோ கார்ரினோ பஸ்டா (ஸ்பெயின்), போர்னா கோரிச் (குரோஷியா), லூகாஸ் பொய்லி (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 4-வது சுற்றில் சிமோனா ஹாலெப்-செரீனா வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    2018-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) தொடக்க சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சீன தைபே வீராங்கனை சு வெய் ஹிக்கை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-6 (7-5), 6-2 என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்தின் டிம் பாசின்ஸ்கியை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி கண்டார். மற்ற ஆட்டங்களில் கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

    ×