search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry snatch"

    மதுரையில் கல்லூரி மாணவியிடம் மர்ம நபர்கள் 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை நகரில் நகை பறிப்பு சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    மதுரை டி.வி.எஸ்.நகரில் உள்ள மீனாட்சி ரோட்டைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நேற்று கல்லூரியை முடித்து விட்டு பழங்காநத்தம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் மாணவியை பின் தொடர்ந்து வந்தனர்.

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென்று மர்ம நபர்கள், ஸ்ரீநிதியை மறித்து அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நகை பறிப்பு நடந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் போலீசார் பல மணி நேரம் அங்கேயே நின்று வாகன சோதனையில் ஈடுபடுவதை அடிக்கடி பார்க்க முடியும். அந்த இடத்தில் போலீசார் இருந்தும் எந்தவித பயமும் இன்றி மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது போலீசாரின் மெத்தனத்தையே காட்டுகிறது.

    கலெக்டர் அலுவலக பெண் ஊழியரிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவை வெள்ளலூரை சேர்ந்த ஜெகதீசன் என்பவரது மனைவி நிர்மலா (வயது 52). இவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் வெள்ளலூரில் வாரச்சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதற்குள் நகைபறித்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி நகைபறிப்பு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் நகை பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டி ஜோசப் காலனி பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது66). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடமதுரை அருகே கஸ்தூரிநாயக்கன் பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு வாலிபர் அவரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். அவர் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினார். இருதயராஜ் பைக்கில் துரத்தி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.

    திருவாரூரில் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் மனைவி குணசுந்தரி (வயது 62). இவர் நேற்று மயிலாடுதுறைக்கு சென்று அங்குள்ள ஒரு நகைக் கடையில் 2¼ பவுனில் ஒரு செயின் வாங்கினார். அதனை பையில் வைத்து கொண்டு பஸ்சில் திருவாரூர் வந்தார்.

    அப்போது பஸ்சில் வைத்து மர்ம நபர் குணசுந்தரி வைத்திருந்த நகையை அபேஸ் செய்து விட்டார். வீட்டுக்கு சென்ற குணசுந்தரி பையில் வைத்திருந்த செயின் மாயமாகி விட்டதை அறிந்து திடுக்கிட்டார். இதனால் வேதனை அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் இதுபற்றி அவர் திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரோண்யா வழக்குப்பதிவு செய்து குணசுந்தரியிடமிருந்து நகையை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகிறார்.

    திருமங்கலம் அருகே 2 பெண்களிடம் 17 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்றனர். #jewelrysnatch

    பேரையூர்:

    சமயநல்லூர் சத்திய மூர்த்தி நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43). இவர், மனைவி ரேவதியுடன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் சென்றார். பின்னர் அங்கிருந்து 2 பேரும் ஊருக்கு புறப்பட்டனர்.

    சமயநல்லூர் சாலையில் தனக்கன்குளம் பிரிவில் சென்றபோது, 2 மர்ம வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அதில் ஒருவன் ரேவதி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். அதிர்ச்சியடைந்த ரேவதி சுதாரிப்பதற்குள் 2 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர் கே.கே.ஜி. நகரைச் சேர்ந்தவர் டெல்லி ராஜன். இவரது மனைவி பத்மாவதி (58). நேற்று இவர் டி.தொட்டிய பட்டியில் உள்ள கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஒருவன் அவரது பின்னால் வந்து கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினான். திருடன்... திருடன்.... என பத்மாவதி கூச்சலிட அக்கம், பக்கத்தினர் திரண்டு திருடனை விரட்டினர்.

    சிறிது தூரத்தில் தயாராக மோட்டார் சைக்கிளில் நின்ற 2 பேர் நகை பறிப்பு திருடனை ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் காமராஜர் வடபகுதி ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா (44). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, புல்லமுத்தூர் பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்குச் சென்றார்.

    அங்கு தரிசனம் முடித்து வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 7 1/2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (41) என்பவரது வீட்டிலும் கதவை உடைத்து கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அங்கிருந்து வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பதாக தெரிகிறது.

    கோவிலுக்கு சென்றுள்ள செல்லப்பாண்டி திரும்பினால் தான் திருட்டு போன பொருட்கள் பற்றிய விவரம் தெரியவரும்.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    வந்தவாசி அடுத்த கண்டவராட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 70). இவரது மனைவி ரங்கநாயகி (60). இவர்கள் உறவினர்களுடன் நேற்று படவேடு கோவிலுக்கு சென்றுவிட்டு. இன்று காலை பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரங்கநாயகி அமர்ந்திருந்த சீட்டின் அருகே 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    பஸ் கண்ணமங்கலம் அருகே வந்து கொண்டிருந்த போது ஒரு வாலிபர் ரங்கநாயகி அணிந்திருந்த செயினை பறித்து தப்பிக்க முயற்சி செய்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கநாயகி கூச்சலிட்டார். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் செயின் பறிப்பில் 2 பெண் உள்பட 4 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த எல்லம்மாள் (வயது85).

    இவர் இன்று காலை தாம்பரத்தில் ஆஸ்பத்திரிக்கு நடந்து கொண்டிருந்தார். தர்ம தோட்டம் என்ற பகுதியில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் எல்லாம்மாள் கழுத்தில் இருந்து 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து எல்லம்மாள் தாம்பரம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை அருகே தாய், மகளை கத்தி முனையில் மிரட்டி நகையை பறித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள கருமத்தம் பட்டி பிருந்தாவன் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் முரளி. கருமத்தம் பட்டியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பிரியலதா (36). நேற்று இரவு 9 மணியளவில் முரளி அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டார். வீட்டில் பிரியலதா அவரது மகள் ராகவி, பிரியலதா தாய் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது 3 பேர் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் முகமூடி மற்றும் கையுறை அணிந்திருந்தனர். மேலும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். அக்கும்பல் பிரியலதா மற்றும் அவரது மகள் ராகவியை கத்தி முனையில் மிரட்டி நகையை தருமாறு கேட்டனர்.

    இதற்கு பிரியலதா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் பிரியலதா, அவரது மகள் ராகவி ஆகியோரை மிரட்டி நகையை பறித்தது.

    பிரியலதாவிடம் மூன்றரை பவுன் நகையும், ராகவி அணிந்திருந்த 2 பவுன் செயின்,கம்மல், மோதிரம் உள்ளிட்ட வைகையும் பறித்தது. தாய்- மகளிடம் இருந்து ஏழரை பவுன் நகையை பறித்து கொண்டு அக்கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. இது குறித்து கருமத்தம் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடைபெற்ற வீட்டை மோப்பம் பிடித்து விட்டு சற்று தூரம் ஓடி நின்றது.

    கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். சூலூர் பகுதியில் தொடர் கொள்ளை, நகை பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் கொள்ளையர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் கைவரிசை காட்டி உள்ளனர்.

    எனவே கொள்ளை சம்பவத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கே.கே.நகரில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Jewelrysnatch

    கே.கே.நகர்:

    திருச்சி சுப்பிரமணியபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் ‌ஷகிலா பானு. இவர் தனது தோழியுடன் அருகில் உள்ள கடைக்கு நேற்று மாலை நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ‌ஷகிலா பானு கழுத்தில் கிடந்த 3¼ பவுன் தங்க செயினை பறித்து சென்றார்.

    இது குறித்து கே.கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவை அருகே தனியார் நிறுவன ஊழியர்களை கடத்தி நகை மற்றும் பணத்தை பறித்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான மாத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 25). இவரும், புதுவை ஆலங்குப்பத்தை சேர்ந்த இளவரசனும் (23) நண்பர்கள். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

    சம்பவத்தன்று இரவு அசோக்கும், இளவரசனும் பூமியான்பேட்டை ஜவகர் நகரில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 மர்ம வாலிபர்கள் அசோக் மற்றும் இளவரசனை மிரட்டி அவர்களை தங்களது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.

    இருளான பகுதிக்கு கொண்டு சென்று அவர்களிடம் இருந்து தங்க செயின் மற்றும் ரொக்க பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்று விட்டனர்.

    இது குறித்து அசோக்கும், இளவரசனும் ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்களிடம் நகை- பணத்தை பறித்து சென்ற வாலிபர்கள் அரும்பார்த்தபுரம் வி.மணவெளியை சேர்ந்த சூசைராஜ் (26), காக்காயந் தோப்பை சேர்ந்த அருண் குமார் (27) மற்றும் பூமியான்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த குருசங்கர் (26), கணேஷ்குமார் (23), வினோத்குமார் (23) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க செயின் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    ×