search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore jewelry snatch"

    கோவையில் நகையை பறிக்க முயன்ற திருடனை வீரத்துடன் துரத்தி சென்று பிடித்த இளம்பெண்ணை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் வைலட் கார்டன் பகுதியில் வசிப்பவர் சத்தி. இவரது மனைவி பாரதி (31). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் இருந்து தனது குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் பாரதியின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றான். சுதாகரித்து கொண்ட பாரதி தனது இரு கைகளால் கழுத்தில் இருந்த செயினை இருக பற்றிக்கொண்டு திருடன் திருடன் என சத்தம் போட்டார்.

    இதனால் பயந்து போன வாலிபர் நகையை பறிக்க முடியாமல் பாரதியை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து ஓடினான். பாரதியும் அவனை பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.

    அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததால் ஓட முடியாமல் அருகில் இருந்த புதருக்குள் சென்று பதுங்கிக்கொண்டான். உடனே பாரதி சத்தம் போட்டார். இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து புதருக்குள் மறைந்து இருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அருகில் இருந்து தென்னை மரத்தை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனை அடுத்து துடியலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

    அப்போது அந்த வாலிபர் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த அசோகன் மகன் சுரேஷ் (25) என்பது தெரிய வந்தது. கடந்த 3 வருடங்களாக கோவையில் தனியார் கூரியர் கம்பெனியில் டெலிவரி பாய்யாக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கோவையில் டிரைவராக பணிபுரிவது தெரியவந்தது.

    பிடிபட்ட சுரேஷ் மீது வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளதா ?என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    நகையை பறிக்கமுயன்ற திருடனை வீரத்துடன் துரத்தி சென்று பிடித்த பாரதியை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.

    கோவை அருகே தாய், மகளை கத்தி முனையில் மிரட்டி நகையை பறித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள கருமத்தம் பட்டி பிருந்தாவன் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் முரளி. கருமத்தம் பட்டியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பிரியலதா (36). நேற்று இரவு 9 மணியளவில் முரளி அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டார். வீட்டில் பிரியலதா அவரது மகள் ராகவி, பிரியலதா தாய் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது 3 பேர் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் முகமூடி மற்றும் கையுறை அணிந்திருந்தனர். மேலும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். அக்கும்பல் பிரியலதா மற்றும் அவரது மகள் ராகவியை கத்தி முனையில் மிரட்டி நகையை தருமாறு கேட்டனர்.

    இதற்கு பிரியலதா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் பிரியலதா, அவரது மகள் ராகவி ஆகியோரை மிரட்டி நகையை பறித்தது.

    பிரியலதாவிடம் மூன்றரை பவுன் நகையும், ராகவி அணிந்திருந்த 2 பவுன் செயின்,கம்மல், மோதிரம் உள்ளிட்ட வைகையும் பறித்தது. தாய்- மகளிடம் இருந்து ஏழரை பவுன் நகையை பறித்து கொண்டு அக்கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. இது குறித்து கருமத்தம் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடைபெற்ற வீட்டை மோப்பம் பிடித்து விட்டு சற்று தூரம் ஓடி நின்றது.

    கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். சூலூர் பகுதியில் தொடர் கொள்ளை, நகை பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் கொள்ளையர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் கைவரிசை காட்டி உள்ளனர்.

    எனவே கொள்ளை சம்பவத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×