search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jet airways"

    ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை பெற்று தருமாறு பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். #JetAirways
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

    நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.

    கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன.

    இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள 40 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வாங்க உள்ளது.

    இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்க மாட் டோம் என்று தெரிவித்து உள்ளனர்.


    மேலும் பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு ஆகியோர் இதில் தலையிட்டு சம்பள பாக்கியை பெற்று தரவேண்டும். நிறுவனத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊழியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பைலட்டுகளில் 250 பேர் இதில் இருந்து விலகி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.

    இதுதொடர்பாக இந்திய விமான சங்கத்தினர் “ஏர் லைன் நிறுவனங்கள் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளன. இதை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். #JetAirways
    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் 1 முதல் வேலைநிறுத்ததில் குதிப்போம் என விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. #Jetairways #Jetairwayspilots
    புதுடெல்லி:

    விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

    இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.

    அவ்வகையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் 37 விமாங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிரந்தரமாக நிறுத்தி விட்டது.

    இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக நேற்று மட்டும் 4 விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

    இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து வேலைநிறுத்ததில் குதிப்போம் என விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல விமானங்களால் வேலைக்கு செல்ல முடியாமல் முடங்கி கிடக்கும் விமானிகள் பிரச்சனைக்கும் ஜெட் ஏர்வேஸ் உரிய முறையில் தீர்வுகாண வேண்டும் எனவும் அகில இந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. #NationalAviatorsGuild #Jetairways #Jetairwayspilots #pilotsstrike
    நிதி நெருக்கடியால் தள்ளாட்டம் போடும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2 மாதங்களாக சம்பளம் வழங்காததால் விமானிகள் நேற்று ஒருசேர விடுப்பு எடுத்தனர். இதனால் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. #JetAirways #JetAirwaysPilots #Flightscancel #Pilotssick
    மும்பை:

    மலிவு கட்டணத்தில் விமானப் பயணம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் விமான போக்குவரத்து துறையில் தடம்பதித்த சில தனியார் நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன.

    அவ்வகையில், நிதி நெருக்கடியால் தள்ளாட்டம் போட்டுவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விமானிகள், பணிப்பெண்கள் மற்றும் பொறியாளர்களுக்கு சரியானபடி சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர், செப்டம்பர் மாதத்துக்கான சம்பளத்தொகை அரைகுறையாக சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான சம்பளம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    இதனால், அதிருப்தியடைந்த விமானிகள் நிர்வாகத்துக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அனைவரும் ஒருசேர நேற்று ‘சிக் லீவ்’ போட்டு மறைமுகமான போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 14 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    இந்த திடீர் அறிவிப்பால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகினர்.



    இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில் இன்று விளக்க அறிக்கை வெளியாகியுள்ளது.

    நேற்று 14 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதற்கு விமானிகள் விடுமுறை எடுத்தது காரணமல்ல. விமான இயக்கம் தொடர்பான வேறுசில விவகாரங்கள்தான் காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #JetAirways #JetAirwaysPilots #Flightscancel  #Pilotssick 
    ரியாத் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம், ரன்வேயை தாண்டி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. #JetAirways #MumbaiFlight #FlightSkidsOff
    ரியாத்:

    சவுதியின் ரியாத் நகரில் இருந்து மும்பைக்கு இன்று அதிகாலை ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அதில் 142 பயணிகள் 7 ஊழியர்கள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடி உயரே எழும்பும் சமயத்தில், திடீரென டேக் ஆப் கைவிடப்பட்டது. இதனால் விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி அதிவேகமாக ஓடியது.

    ஆனால், சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, சிறிது தூரத்திலேயே விமானத்தை நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டன.



    விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் டேக் ஆப் கைவிடப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஓடுபாதையின் எல்லைக்குள் விமானத்தை நிறுத்துவதற்காக பிரேக்கை கடுமையாக அழுத்தியதால் விமானம் சறுக்கிச் சென்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #JetAirways #MumbaiFlight #FlightSkidsOff
     
    ×