search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jammu kashmir attack"

    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #JammuKashmir #CRPF #MKStalin
    சென்னை:

    திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் கண்டனத்திற்குரியது. சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது.

    உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். #JammuKashmir #CRPF #MKStalin
    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியானதால், பிரியங்கா காந்தி தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தார். #JammuKashmir #CRPF #PriyankaGandhi

    பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தர பிரசேத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் கடந்த நான்கு நாட்களாக உத்தர பிரதேசத்தில் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் முதன்முதலாக இன்று மாலை பிரியங்கா காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்தார். பேட்டிக்கு தயாரானபோது, ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் செய்தி குறித்து அறிந்தார். இதனால் உடனடியான தனது முதல் பேட்டியை ரத்து செய்தார். அத்துடன் இரங்கல் தெரிவித்தார்.



    பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘இப்போது அரசியலைப் பற்றி பேசுவது பொருத்தமாகாது என நினைக்கிறேன். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டுமொத்த நாடே உறுதுணையாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #JammuKashmir #CRPF #PriyankaGandhi
    ஜம்மு-காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. #JammuKashmir #CRPF
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள். விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தார்கள்.

    வீரர்கள் சென்ற வாகனம் லடூமோடு பகுதியில் சென்றபோது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை பயங்கரவாதிகள் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரமாக மோதச் செய்தனர். இதில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.

    இதில் இருந்த வீரர்களில் 8 பேரும், அதன்பின் 18 பேரும் இறந்ததாக முதலில் தகவல் வெளியானது. அதன்பின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.



    இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மத்திய நிதியமைச்சர் இதற்கு பதிலடி கொடுக்கும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி, வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், நாளை ஸ்ரீநகர் விரைகிறார். #JammuKashmir #CRPF
    ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #JammuKashmir #CRPF
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மிரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது பயங்கரவாதிகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    இதில் 18 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். வாகனத்தில் அதிகமான வீரர்கள் சென்றதால் உயிர்ப்பலி அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. #JammuKashmir #CRPF 
    ×