search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "J Deepa"

    • தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தீபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    சென்னை:

    ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவர் அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் தொண்டர்களை சந்தித்து வந்தார். இதனால் அவரது வீட்டில் தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

    இதையடுத்து தீபா புதிய அமைப்பை தொடங்கி அதற்கு தொண்டர்களை சேர்த்து வந்தார். அவருக்கு உறுதுணையாக கணவர் மாதவன் இருந்தார். அதன் பிறகு தீபாவுக்கும், மாதவனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

    அரசியலிலும் அவருக்கு மவுசு குறையத்தொடங்கியது. இதையடுத்து அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் கணவர் மாதவனுடன் சேர்ந்தார்.

    இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடும் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக்குக்கு கிடைத்தது. தி.நகர் வீட்டில் வசித்து வந்தாலும் அவ்வப்போது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று வருகிறார்.

    இந்த நிலையில் ஜெ.தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஜெ.தீபா திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாக தெரிகிறது.

    இதுதொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் கூறியதாவது:-

    எனது மனைவி தீபா என்னைப்பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்று வரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன். அவர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

    மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்ப தகராறு தான். அவர் ஏதோ கோபத்தில் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். தீபாவை அன்று போல இன்றும் நேசிக்கிறேன். அவர் மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன்.

    தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. இதுவும் கடந்த போகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தீபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

    ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.
    சென்னை :

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இந்த சாதகமான தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- இது சாதகமான தீர்ப்பே அல்ல. இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

    கேள்வி:- இந்த வழக்கு நடைபெற்றபோது ஏதேனும் இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டதா?

    பதில்:- இந்த வழக்கு முறைப்படி தான் நடந்தது. அதில் எந்த குறையும் சொல்லமுடியாது. சிரமங்களை அதிகம் எதிர்கொள்ளவில்லை என்றாலும் எதிர்ப்புகள் அதிகம் இருந்தது. அ.தி.மு.க. கட்சி சார்பில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.

    கேள்வி:- வேதா இல்லத்தின் சாவி எப்போது உங்கள் கையில் கிடைக்க போகிறது?

    பதில்:- தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம். வேதா இல்லத்தின் சாவியை பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. நிறைய சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதை நாங்கள் செய்யவேண்டும்.

    வேதா இல்லம்

    கேள்வி:- வேதா இல்லம் அ.தி.மு.க.வின் கோவில் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

    பதில்:- இது சரியான கருத்து தான். அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கில்லை. நானே இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்காக சட்டப்படியான வாரிசுதாரர்களிடம் அந்த பொறுப்பு செல்வதை தடுக்க கூடாது. வேதா இல்லத்தை கோவிலாக கருதுவது அவர்களது உரிமை, அதனை உடைமை என்று எடுத்துக்கொள்வது தவறு.

    கேள்வி:- இந்த தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

    பதில்:- அப்படி ஏதாவது நடந்தால், சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம்.

    கேள்வி:- வேதா இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருக்கிறதா?

    பதில்:- அப்படி எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நாங்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

    கேள்வி:- எப்போது வேதா நிலையம் செல்ல இருக்கிறீர்கள்?

    பதில்:- நாங்கள் சட்ட விதிகளை முழுமையாக படித்து, அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க வேண்டும். அதன்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

    மேற்கண்டவாறு ஜெ.தீபா பதில் அளித்தார்.

    ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணையின் போது தன் தரப்பு வக்கீலையும் அனுமதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். #JDeepa #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணையின் போது தன் தரப்பு வக்கீல் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா மனு கொடுத்தார்.

    இந்த மனுவை நீதிபதி ஆறுமுகசாமி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நீதிபதி ஆறுமுகசாமியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். தன் தரப்பு வக்கீலை விசாரணையின்போது உடன் இருக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #JDeepa #ArumugasamyCommission
    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை ஆய்வில் ஜெ.தீபா பங்கேற்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. #Jayalalithaa #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் ராஜன் ஹெக்டே மற்றும் நர்சு ஜோஸ்னமோல் ஜோசப் ஆகியோர் இன்று ஆஜரானார்கள். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி செய்தவர்கள்.

    அவர்களிடம் ஆணைய வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு இருவரும் பதில் அளித்தனர். இதற்கிடையில் அப்பல்லோ மருத்துவமனை ஆய்வின்போது தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா தாக்கல் செய்த மனுமீது விசாரணை நடந்தது.

    அப்போது ஜெ.தீபா மற்றும் அவரது வக்கீல் ஆய்வில் பங்கேற்பதற்கு ஆணையம் மற்றும் அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து ஜெ.தீபா சார்பில் ஆஜராக வக்கீல் தொண்டன் சுப்பிரமணி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.


    ஆய்வின்போது தனது ஆதரவாளர்கள் வந்தாலும் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுடன் நடப்பார்கள். எந்த தவறும் நடக்காது என்று அதில் கூறி இருந்தார்.

    ஜெ.தீபாவின் உறுதி மொழியை ஏற்று அப்பல்லோ மருத்துவமனை ஆய்வில் ஜெ.தீபா மற்றும் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி பங்கேற்க அனுமதியை நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார்.

    29-ந்தேதி நடக்கும் ஆய்வில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு, சசிகலா இருந்த அறை, அரசு டாக்டர்கள் குழு தங்கி இருந்த இடம், உணவு தயாரிக்கப்பட்ட இடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்கின்றனர். #Jayalalithaa #Deepa #inquiryCommission #ApolloHospital
    ×