search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Italy"

    இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பாலத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. #GenoaBridgeCollapse
    ரோம்:

    இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையில் கான்கிரீட் தூண்களை அமைத்து அவற்றின் மீது உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாகதான் இங்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடையில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன.

    இந்நிலையில், ஜெனோவா நகரின் மேற்கில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள A10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் பாலத்தின் ஒருபகுதி கடந்த 13-ம் தேதி திடீரென்று இடிந்து விழுந்தது.


    சுமார் 200 மீட்டர் நீளத்திலான பகுதி சுமார் 100 அடி ஆழத்தில் நொறுங்கி விழுந்ததால் அப்போது அவ்வழியாக சென்ற பல கார்களும் லாரிகளும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டன. அவற்றை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. பின்னர், வாகன இடிபாடுகளுக்கு இடையில் இருந்து அடுத்தடுத்து பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டன. நேற்றிரவுடன் முடிவடைந்த மீட்பு பணிகளின்போது கார்களுக்கு இடையில் சிக்கி இருந்த 3 பிரேதங்கள் கிடைத்தன.


    இதைதொடர்ந்து, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GenoaBridgeCollapse
    இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் விரைவு நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பாலத்தின் அடியில் இடிபாடுகளில் சிக்கிய வாகனங்களுக்குள் இருந்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Genoaviaductcollapses
    ரோம்:

    இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையில் கான்கிரீட் தூண்களை அமைத்து அவற்றின் மீது உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாகதான் இங்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடையில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன.

    இந்நிலையில், ஜெனோவா நகரின் மேற்கில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள A10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று திடீரென்று இடிந்து விழுந்தது.


    அந்த பாலத்தின் சுமார் 200 மீட்டர் நீளத்திலான பகுதி சுமார் 100 அடி ஆழத்தில் நொறுங்கி விழுந்ததால் அப்போது அவ்வழியாக சென்ற பல கார்களும் லாரிகளும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. #Genoa #Genoaviaductcollapses
    பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரின் இன்றைய போட்டியில் 3-0 என இத்தாலியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. #HWC2018
    லண்டன்:


    பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியா அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெரும். 2 மற்றும் 3 வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெரும்.

    முன்னதாக, இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடனான போட்டியில்  1-1 என சமநிலை பெற்றது.

    இந்நிலையில், காலிறுதிக்கு தகுதி பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இத்தாலியை எதிர்த்து களமிறங்கியது.

    இன்றைய பரபரப்பான ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால்ரேம்சியாமி முதல் கோலை அடித்தார். இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நேகா கோயல் இரண்டாவது கோலையும், ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா 3-வது கோலையும் அடித்து அசத்தினர்.

    இறுதிவரை போராடிய இத்தாலி வீராங்கனைகளால் கோல் எதுவும் அடிக்க முடியாததால் 3-0  என இத்தாலியை வீழ்த்தி பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. #HWC2018
    ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளதால் நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சி.பி.ஐ. அணுகி உள்ளது.
    புதுடெல்லி:

    முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இங்கிலாந்தை சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த பேரத்தை செய்து முடிப்பதற்காக, ரூ.423 கோடி லஞ்சம் கைமாறியதாக வெளியான தகவலையடுத்து, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

    இந்த லஞ்ச விவகாரம் குறித்து சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட 3 பேரில் ஒருவரான இத்தாலியை சேர்ந்த கர்லோ கெரோசாவை (வயது 71) பிடிக்க சர்வதேச போலீஸ் மூலம் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டது. இதன்பேரில், இத்தாலி போலீசார் கர்லோ கெரோசாவை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்பதால், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அக்கோரிக்கையை இத்தாலி நிராகரித்துள்ளது. இந்தியாவுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் எதுவும் இல்லாததை அந்நாடு சுட்டிக்காட்டி உள்ளது.

    இது, சி.பி.ஐ.க்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும், வேறு விதிமுறைகளின் கீழ், கெரோசாவை நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சி.பி.ஐ. அணுகி உள்ளது.
    ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 7 நாள் பயணமாக இத்தாலி சென்றடைந்தார். #SushmaSwaraj #Italy
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 7 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த பயணத்தின் போது அவர் இத்தாலி, பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய 4 நாடுகளுக்கு செல்கிறார். இதையொட்டி முதற்கட்ட பயணமாக சுஷ்மா சுவராஜ் நேற்று இத்தாலி புறப்பட்டு சென்றார்.

    இது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஐரோப்பிய நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் விதமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஒரு வார காலம் அங்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது அந்தந்த நாடுகளின் அரசியல் தலைவர்களுடன் அவர் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்கிறார். இது இந்தியாவுக்கும், அந்த 4 நாடுகளுக்கும் பயன் அளிக்கும்.

    21-ந் தேதி, பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார். அதனை தொடர்ந்து அவர் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் கலைந்துரையாடுகிறார்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 
    இத்தாலி பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முக்கிய இரண்டு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளது. #Italy
    ரோம்:

    சமீபத்தில் நடந்து முடிந்த இத்தாலி பாராளுமன்ற தேர்தலில்  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த 11 நாட்களாக அரசியல் சூழல் முடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகளான பைவ் ஸ்டார் கூட்டணி - மத்திய வலதுசாரி கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. 

    இந்நிலையில், இந்த கூட்டணியை ஆட்சியில் அமர்த்த முக்கிய பங்காற்றிய சட்ட பேராசிரியர் கியூசெப்பீ கோண்டே உடன் இன்று அந்நாட்டு அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா சந்தித்து, பிரதமராக பொறுப்பேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். 

    அதிபரின் அழைப்புக்கு பைவ் ஸ்டார் லீக் கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளது. கியூசெப்பீ கோண்டே எவ்வித அரசியல் அனுபவமும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    இத்தாலி கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்ட்டோ மான்சினி நியமிக்கப்பட்டுள்ளார்.#Mancini #ManciniDay #VivoAzzurro
    மிலன்:

    இத்தாலி கால்பந்து அணி 1958-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை. தகுதி சுற்று தோல்வி எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் ஜியன் பியரோ வெந்துரா அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இத்தாலி அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்ட்டோ மான்சினி நேற்று நியமிக்கப்பட்டார். 53 வயதான ராபர்ட்டோ மான்சினி இத்தாலி கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஆவார்.#Mancini #ManciniDay #VivoAzzurro
    ×