search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL Auction"

    இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. #IPLAuction
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் விடும்போது அனைத்து அணிகளும் போட்டி போட்டு அவர்களை ஏலம் எடுக்க விரும்பின. இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக அளவில் விரும்பியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 5.8 கோடி ரூபாய் வரை விருப்பம் தெரிவித்தது. ஆனால் அதற்குமேல் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இன்றைய ஏலத்தில் இதுதான் அதிகபட்ச தொகையாக இருக்க வாய்ப்புள்ளது.

    ஆஸ்திரேலியா தொடரில் அசத்தி வரும் முகமது ஷமியை வாங்கவும் சென்னை சூப்பர் கிங்ஸ் விருப்பம் தெரிவித்தது. ஆனால், இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. வருண் ஆரோனை 2.40 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
    வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பரான நிக்கோலஸ் பூரனை 4.2 கோடி ரூபாய் கொடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. #IPL2019 #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சார் பட்டேலை  ஏலம் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஆர்வம் காட்டின. இதனால் இவரது மதிப்பு கோடியை தாண்டிச் சென்றது.

    இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் விக்கெட் கீப்பரான நிக்கோலஸ் பூரனை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பரான விருத்திமான் சகாவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. கார்லஸ் பிராத்வைட்டை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா ஏலம் எடுத்தது. #IPL2019 #IPLAuction2019
    ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுவராஜ் சிங்கிற்கு அடிப்படை விலையாக 1 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அவரை எந்த அணி உரிமையாளர்களும் ஏலம் எடுக்க விரும்பவில்லை. இதனால் அவர் ஏலம் போகவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி கேப்டனான கார்லஸ் பிராத்வைட்டை எடுக்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டின. இறுதியில் கொல்கத்தா அணி ஐந்து கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஹென்ரிக்ஸை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    ஐபிஎல் ஏலத்தில் ஹனுமா விஹாரி 2 கோடி ரூபாய்க்கும், ஹெட்மையர் 4.20 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டார்கள். #IPL2019 #IPLAuction2019
    2019 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் வீரராக மனோஜ் திவாரி ஏலம் விடப்பட்டார். இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல் புஜாரா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் ஏலம் போகவில்லை.

    அடுத்து ஹனுமா விஹாரி ஏலத்திற்கு வந்தார். இவருக்கு அடிப்படை விலையாக ரூ. 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன், டெல்லி கேப்பிட்டல், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஹெட்மையர் ஏலத்திற்கு வந்தார். இவருக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. #IPLAuction #Jaipur #IPL2019
    ஜெய்ப்பூர்:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஏற்கனவே ஏலத்தில் இருந்து விலகி விட்டனர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி கேப்பிட்டல் அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20.95 கோடியையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.20 கோடியையும், மும்பை இந்தியன்ஸ் அணி 11.15 கோடியையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ. 9.70 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிட முடியும். வீரர்கள் ஏலம் பகல் 2.30 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #IPLAuction #Jaipur #IPL2019
    12-வது ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 70 இடத்திற்கு மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். #IPL #IPLAuction
    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. அணி நிர்வாகங்கள் சார்பில் பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்பட்டு விட்டதால் இந்த முறை 70 வீரர்கள் மட்டுமே ஏலத்தின் மூலம் எடுக்கப்பட இருக்கிறார்கள். 70 இடத்திற்கு மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் 232 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

    ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 800 பேர் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாதவர்கள் ஆவர். ரஞ்சி கிரிக்கெட்டில் புதிதாக விளையாடும் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஜோரம், நாகலாந்து, சிக்கிம், உத்தரகாண்ட், புதுச்சேரி மற்றும் பீகார் ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் முதல்முறையாக ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் இருந்து இறுதிப்பட்டியலை வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த முறை ரிச்சர்ட் மேட்லிக்கு பதிலாக இங்கிலாந்தில் ஏலம் நடத்துவதில் பிரபலமான ஹூக் எட்மிடெஸ் என்பவர் ஐ.பி.எல். ஏலத்தை நடத்த இருக்கிறார். #IPL #IPLAuction
    ஐபிஎல் சீசன் 2019-க்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடக்கிறது. இதில் 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். #IPL2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. 11-வது சீசன் முடிந்து கடந்த மாதம் வரை வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான நடைமுறை நடைபெற்றது.

    இதில் தவான், டி காக் உள்பட பல்வேறு வீரர்கள் வேறு அணிக்கு மாறியுள்ளனர். இந்நிலையில் 2019 சீசனுக்கான வீரர்களின் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாடு வீரர்களையும் 8 அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்க இருக்கிறார்கள்.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான தொடரின்போது அதிரடி காட்டிய இளம் வீரர் ஹெட்மையரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×