search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indonesia earthquake"

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் குறைந்தது 48 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #IndonesiaEarthquake #TsunamiAttack
    சுலாவேசி:

    இந்தோனேசியா நாடு உலகிலேயே அடிக்கடி நில நடுக்கம் உருவாகும் பகுதியில் அமைந்துள்ளது.

    அதோடு அந்த நாடு எரிமலை வளையத்துக்குள்ளும் இருக்கிறது. அங்கு உயிருள்ள சுமார் 150 எரிமலைகள் இருக்கின்றன.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மிகப்பெரிய நாடான இந்தோனேசியா 17 ஆயிரத்து 508 தீவுகளைக் கொண்டது. இந்த தீவுப் பகுதிகளில்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதுண்டு. கடந்த 2004-ம் ஆண்டு சுமத்ரா தீவு அருகில் 9.1 ரிக்டர்அளவு கோலுக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி பேரலைகள் தாக்கி சுமார் 2½ லட்சம் பேர் உயிரிழந்தனர்.

    அத்தகைய சக்தி வாய்ந்த நிலநடுக்க தாக்கம் நேற்றும் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவேசி தீவில் நேற்று மாலை 6 மணிக்கு அந்த நிலநடுக்கம் தாக்கியது. டோங்கலா என்ற பகுதியை மையமாகக் கொண்டு அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக அந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கும் என்று அந்த நாட்டு பேரிடர் கழகம் எச்சரிக்கை விடுத்தது. இதை கேட்டதும் கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.


    இந்த நிலையில் சுலாவேசி தீவின் பலு என்ற பகுதியில் சுனாமி பேரலைகள் தாக்கின. ஊருக்குள் கடல் தண்ணீர் புகுந்தது. சுமார் 10 அடி உயரத்துக்கு கடல் அலைகள் ஆர்ப்பரித்தப்படி ஊருக்குள் வந்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சுனாமி தாக்கியதை அறிந்ததும் பலு பகுதி மக்கள் உயிர் தப்பிக்க மாடிகளுக்கு ஓடி சென்றனர். என்றாலும் ஆயிரக்கணக்கானவர்கள் சுனாமி அலையில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 48 பேர் வரை உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

    நில நடுக்கம் ஏற்பட்ட போது சுலாவேசி மற்றும் கலியா மந்தன் தீவுகளில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. அதிலும் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

    கட்டிட இடிபாடுகள் மற்றும் சுனாமி பேரலைகளில் சிக்கி காயம் அடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த டோவ்லா மாகாணத்தில் சுமார் 6 லட்சம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் மக்கள் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். #IndonesiaEarthquake #TsunamiAttack 
    இந்தோனேசியாவை இன்று தாக்கிய சுனாமியால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. #Indonesiaarthquake #TsunamiAttack
    சென்னை:

    இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கியது.

    சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகி, பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில், இந்தோனேசியாவை இன்று  தாக்கிய சுனாமியால் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர கடலோரப் பகுதிகளுக்கு ஆபத்தில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர்  அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்ததும், அதன் எதிரொலியாக  தமிழ்நாட்டில் சுமார் 9 ஆயிரம் பேர் பலியானதும் நினைவிருக்கலாம். #Indonesiaarthquake #TsunamiAttack
    இந்தோனேசியா நாட்டின் மத்திய பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. #Indonesiaarthquake
    ஜகர்தா:

    புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில், இந்தோனேசியா நாட்டின் மத்திய பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    முன்னதாக, இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர்  அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். #7.5magnitudeearthquake #Indonesiaarthquake
    ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்திவரும் இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று மாலை மீண்டும் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. #Indonesiaearthquake
    ஜகார்த்தா:

    பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதற்கிடையே, இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பெலண்டிங் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவானது.

    இந்நிலையில், இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று மாலை மீண்டும் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. 

    இந்தோனேசியாவின் லம்போக் நகரில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #Indonesiaearthquake #Lombokislandearthquake
    ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்திவரும் இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று மீண்டும் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. #Indonesiaearthquake
    ஜகர்தா:

    பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக்கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் இருந்து சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவின் கிழக்கு பகுதியில் இன்று காலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பெலண்டிங் நகரில் இருந்து மேற்கே-தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.

    இந்தோனேசியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Indonesiaearthquake #Lombokisland #Lombokislandearthquake
    இந்தோனேசியாவை இன்று மாலை குலுக்கிய 7 ரிக்டர் நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்பப்பெறப்பட்டது. #Indonesiaquake #Indonesialiftstsunamiwarning
    ஜகர்தா:

    பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியா நாடு அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள பாலி மற்றும் லம்பாக்  தீவின் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    கடந்த வாரம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 17 பேர் பலியான நிலையில் இன்றைய நிலநடுக்கத்துக்கு பின்னர் இந்தோனேசிய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னர் இந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது.

    பாலி மற்றும் லம்பாக் நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வழக்கம்போல் விமான போக்குவரத்து நடைபெற்று வருவதாக இந்தோனேசியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Indonesiaquake #Indonesialiftstsunamiwarning 
    ×