என் மலர்
செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியா நாட்டின் மத்திய பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. #Indonesiaarthquake
ஜகர்தா:
புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், இந்தோனேசியா நாட்டின் மத்திய பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னதாக, இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். #7.5magnitudeearthquake #Indonesiaarthquake

Next Story