search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase in price"

    • பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை, கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
    • கதிர் நன்றாக வளர்ந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து, உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர், குப்பிரிக்கா பாளையம், பெருங்குறிச்சி, சுள்ளிப்பாளையம், கவுண்டம்பாளையம், திடுமல், கொத்தமங்கலம், ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், சின்ன மருதூர், பெரிய மருதூர், பாகம்பாளையம், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை, கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். கதிர் நன்றாக வளர்ந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து, உள்ளுர்

    பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் மக்காச் சோளத்தை தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி, பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மக்காச்சோள மாவு தயாரிக்கும் மில்கள், மாடு ,கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.18 க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால், ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20 வரை விற்பனை யானது. விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
    • கிழங்கு மில் ஆலைகளில் ஜவ்வரிசி மாவு தயாரித்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பு கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் குறிப்பாக முள்ளுவாடி, தாய்லாந்து, வருஷ வெள்ளை, 226 வெள்ளை, பர்மா குங்கும ரோஸ் உள்பட பல்வேறு ரகங்களில் அதிக அளவில் மரவள்ளி பயிரிட்டுள்ளனர். இங்கிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், மலைவேப்பன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சேகோ பேக்டரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

    கிழங்கு மில் ஆலைகளில் ஜவ்வரிசி மாவு தயாரித்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பு கின்றனர். ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கின்றனர்.

    அதன்படி கடந்த சில நாட்களாக மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ.1000 அதிகரித்து, ரூ.8 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. சிப்ஸ் தயாரிக்கும் தொழிலுக்கு மரவள்ளி கிழங்கு ஒரு டன் ரூ.8,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மரவள்ளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ள னர். இனிவரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லைப்பூ, அரளி, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் பனிப் பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லைப்பூ, அரளி, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.700-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் ஏலம் போனது.

    இந்த நிலையில் கார்த்திகை மாதத்தில் பனிப் பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது.இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ100- க்கும், அரளி கிலோ ரூ.200- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.900-க்கும், செவ்வந்திப்பூ ரூ.160- க்கும், கனகாம்பரம் ரூ.1200-க்கும் ஏலம் போனது. இந்த விலை உயர்வால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
    • இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.

    மூலனூர்:

    தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

    அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை. எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த 3 வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.

    இவ்வாறு கூறினார்.

    இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.

    • மழையின் காரணமாக முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது.
    • ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக முருங்கைக்காய் வியாபாரி தெரிவித்தார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்த வாரம் 60 விவசாயிகள் 5 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.85 முதல் ரூ.90 வரைக்கும், மரம் முருங்கை ரூ.70முதல் ரூ.80 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.90 முதல் ரூ.100 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    தற்போது மழையின் காரணமாக முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சத்தீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து ெதரிவித்தார்.  

    • நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன் வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
    • பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், பிலிக்கல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன் வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்களை கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தோப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர்.

    மேலும் இங்கு விளையும் வாழைத்தார்களை விவசா யிகள் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார்ஏல மார்க்கெட்டுக்கு விற்ப னைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு வரும் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி லாரிகள் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும்.

    வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி ரூ.350-க்கும் மொந்தன் ரூ.300க்கும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும்,கற்பூரவள்ளி ரூ.550-க்கும் , மொந்தன் ரூ.500க்கும் விற்பனையானது. வரத்து குறைவாலும், ஆவணி மாத முகூர்த்த நாள் உள்ளதாலும் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்ந்து மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ 15ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரச பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி,கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், பெரியமருதூர் சோளி பாளையம், சோழசிராமணி, பெருங்குறிச்சி, சிறு நல்லிக்கோவில், திடுமல், தி. கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, மாரப்பம்பா ளையம் ஜமீன்இளம்பள்ளி குரும்பல மகாதேவி,கொத்தமங்கலம், ஆனங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர், சின்னசேலம், கீரனூர், நாமகிரிப்பேட்டை, புதன்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து பல்வேறு ரகமான ஜவ்வரிசிகள் மற்றும்கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    மேலும் பெரிய ரகமான மரவள்ளி கிழங்குகளை சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் வாங்கி செல்கின்றனர்.

    சேகோ சர்வ் மூலம் ஜவ்வரிசி விலை உயரும்போது மரவள்ளிக்கிழங்குக்கு விலை உயர்த்தியும், சவ்வரிசி விலை வீழ்ச்சி அடையும் போது மரவள்ளி கிழங்கின் விலையை குறைத்தும் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது.தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்ந்து மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ 15ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    சிப்ஸ் தயார் செய்யப்படும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    மரவள்ளி கிழங்கு வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழகத்தில் ஊட்டி, மேட்டுப்பாளையம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கேரட் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
    • இதன் காரணமாக சேலம் மாவட்டத்துக்கு கேரட், பீன்ஸ் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் ஊட்டி, மேட்டுப்பாளையம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கேரட் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கேரட் தமிழகத்தில் சேலம் மாவட்டம் உள்பட பல பகுதிகளுக்கும், இதை தவிர வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதேபோல் ஓசூர், பெங்களூரு பகுதிகளில் பீன்ஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து சேலம் மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பீன்ஸ் லோடு அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் பெங்களூரு, ஓசூரில் பெய்து வரும் தொடர் மழையால் பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக சேலம் மாவட்டத்துக்கு கேரட், பீன்ஸ் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ரூ. 60க்கு விற்ற பீன்ஸ் தற்போது ரூ.78 முதல் ரூ.80 என்றும், ரூ.60க்கு விற்ற கேரட் ரூ.85 முதல் ரூ.90 வரை என விலை உயர்ந்துள்ளது.

    • பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தோப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர்.
    • வாழைத்தார் ஒன்று ரூ.500க்கும் விற்பனையானது. வரத்துக்குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர் ,பாண்டமங்கலம், வெங்கரை, குப்பிச்சிபாளையம், குச்சிபாளையம் ,பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன் வாழை, ரஸ்தாலி ,பச்ச நாடன், கற்பூரவல்லி ,மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்களை கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் கரூர், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தோப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர்.

    மேலும் இங்கு விளையும் வாழைத்தார்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார்ஏல மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு வரும் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி லாரிகள் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க–ளுக்கும் தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.300-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.400க்கும் விற்பனையானது.நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும் , மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500க்கும் விற்பனையானது. வரத்துக்குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் உழவு சந்தையில் எலுமிச்சை பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • எலுமிச்சம் பழம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

    நாமக்கல்:

    நாமக்கல் உழவு சந்தையில் எலுமிச்சை பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்த காரணத்தால் எலுமிச்சை பழம் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எலுமிச்சம் பழம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சிறுமலையில் சவுக்குமரம், தோதகத்தி, கிளாவகை ஆகிய பயிர்களுக்குஇடையே ஊடுபயிராக மிளகு விளைவிக்கப்படுகிறது.
    • மிளகு செடிகளில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை, தென்மலை, பழையூர், புதூர், அகஸ்தியர்புரம், தாளகடை உள்ளிட்ட கிராமங்களில் நறுமண பயிரான மிளகு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சவுக்குமரம், தோதகத்தி, கிளாவகை ஆகிய பயிர்களுக்குஇடையே ஊடுபயிராக மிளகு விளைவிக்கப்படுகிறது. செப்டம்பர்மாதம் இதன் அறுவடை காலமாகும்.

    ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பூக்கள் பூக்க தொடங்கும். இந்த மாதத்தில் காற்று அதிகமாக வீசும் என்பதால் பூக்கள் உதிர்ந்து விளைச்சல் குறையும். அதன்படி தற்போது மிளகு ெசடிகளில் பூக்கள் அதிகளவு உதிர்ந்து வருகின்றன. இதனால் கடந்த வருடம் ஒரு கிேலா ரூ.550-க்கு வாங்கப்பட்ட மிளகு தற்போது ரூ.800ஆக அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி தினகரன் தெரிவிக்கையில், சிறுமலை வனப்பகுதியில் கரிமுண்டா, குட்டநாடான், பன்னீர்வகை மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து மதுைர, திருச்சி, சென்னை போன்ற வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    வழக்கமாக ஆடி மாதத்திற்கு முன்பாகவே காற்றின்வேகம் அதிகமாக உள்ளது. இதனால் மிளகு செடிகளில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் விலை சற்று அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்தி பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
    • கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.2, ஆயிரம் வரை உயர்வடைந்து ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.15ஆயிரத்திற்கு விற்பனையானது.தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரைை உயர்ந்து ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் ‌மரவள்ளி‌ கிழங்கின் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.மரவள்ளி கிழங்கு விலை உயர்வு அடைந்துள்ளதால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×