search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிளகு விளைச்சல்"

    • சிறுமலையில் சவுக்குமரம், தோதகத்தி, கிளாவகை ஆகிய பயிர்களுக்குஇடையே ஊடுபயிராக மிளகு விளைவிக்கப்படுகிறது.
    • மிளகு செடிகளில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை, தென்மலை, பழையூர், புதூர், அகஸ்தியர்புரம், தாளகடை உள்ளிட்ட கிராமங்களில் நறுமண பயிரான மிளகு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சவுக்குமரம், தோதகத்தி, கிளாவகை ஆகிய பயிர்களுக்குஇடையே ஊடுபயிராக மிளகு விளைவிக்கப்படுகிறது. செப்டம்பர்மாதம் இதன் அறுவடை காலமாகும்.

    ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பூக்கள் பூக்க தொடங்கும். இந்த மாதத்தில் காற்று அதிகமாக வீசும் என்பதால் பூக்கள் உதிர்ந்து விளைச்சல் குறையும். அதன்படி தற்போது மிளகு ெசடிகளில் பூக்கள் அதிகளவு உதிர்ந்து வருகின்றன. இதனால் கடந்த வருடம் ஒரு கிேலா ரூ.550-க்கு வாங்கப்பட்ட மிளகு தற்போது ரூ.800ஆக அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி தினகரன் தெரிவிக்கையில், சிறுமலை வனப்பகுதியில் கரிமுண்டா, குட்டநாடான், பன்னீர்வகை மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து மதுைர, திருச்சி, சென்னை போன்ற வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    வழக்கமாக ஆடி மாதத்திற்கு முன்பாகவே காற்றின்வேகம் அதிகமாக உள்ளது. இதனால் மிளகு செடிகளில் பூக்கள் உதிர்ந்து வருவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் விலை சற்று அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×