search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increase in price"

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.900-க்கும், சம்பங்கி கிலோ ரூ.170- க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர்.
    • மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். மரவள்ளி கிழங்குகளை சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக சவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர். மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதே போல் சவ்வரிசி விலை உயரும் போதும், விலை வீழ்ச்சி அடையும் போதும் சேகோசர்வ் மூலம் மரவள்ளி கிழங்குகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர்.

    சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கை ரூ13000 க்கு வாங்கிச் சென்றனர். நேற்று சவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ. 12ஆயிரத்து 700-க்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ 14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர். 

    • நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ இன்று ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டை கள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு களுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்க ளுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக்கொள் முதல் விலை ரூ. 5.50 ஆக இருந்தது. ஜூலை மாதம் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 28-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.20 ஆக இருந்தது. நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள் முதல் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை- 480, பர்வாலா-363, பெங்களூர்-465, டெல்லி-379, ஹைதராபாத்-420, மும்பை-480, மைசூர்-465, விஜய வாடா-440, ஹொஸ்பேட்-425, கொல்கத்தா-480.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ இன்று ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது. கடந்த 26-ந் தேதி 93 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 105 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.12 அதி கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • பூ சாகுபடி செய்யப்பட்டு நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
    • கடந்த 10 நாட்களாகவே பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சுற்றுப்புறத்தில் இருந்து பூ சாகுபடி செய்யப்பட்டு நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். மேய்க்கல்நாயக்கன்பட்டி, ஏழூர் பட்டி, பொடிரெட்டிபட்டி, தம்மம்பட்டி, நாமகிரிபேட்டை, முள்ளுக்குறிச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து சாகுபடி செய்யப்படும் பூக்கள் நாமக்கல் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும். உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. மல்லிகை பூ சேலம், ஈரோடு, கரூர், திருச்செங்கோடு, மற்றும் திண்டுக்கல்லில் இருந்து வியாபாரிகள் பூக்களை வாங்கிசெல்கொன்றன. கடந்த 10 நாட்களாகவே பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. பூக்கள் விலை விபரம் மல்லிகைப்பூ ரூ.480, முல்லை ரூ.80, சாமந்தி ரூ.400, சம்மங்கி ரூ.100, கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ 20-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. 

    • எருமப்பட்டி, ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்கா யம் சாகுபடி செய்யப்படுகிறது.
    • உற்பத்தி குறைவு காரணமாக சந்தைகளுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்கா யம் சாகுபடி செய்யப்படு கிறது. உற்பத்தி குறைவு காரணமாக சந்தைகளுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தக்கா ளிக்கு நிகராக சின்ன வெங் காயத்தின் விலையும் ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரம் ரூ.40 முதல் ரூ.45 வரை விற்ற ஒரு கிலோ சின்ன வெங்காயம் தற்போது ரூ.70 வரை விற்கப்படுகிறது.

    உற்பத்தி குறைவாக உள்ளதால், இருப்பில் உள்ள சின்ன வெங்காயமே தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே, இதன் விலை வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் நாமக்கல்லில்லி நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்ய ப்பட்டது குறிப்பிடத் தக்கது. சின்ன வெங்காயம், தக்காளி என சமையலுக்குத் தேவையான முக்கியப் பொருட்களின் விலை அதி கரித்துள்ளதால் பொது மக்கள் சிரமத்திற்குள்ளா கியுள்ளனர்.

    • பரமத்திவேலூர் பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற் றிலை போன்ற ரகங்களை பயிர் செய்துள்ளனர்.
    • வெற்றிலை வரத்து குறைந்ததாலும், முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை‌ விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், அனிச்சம் பாளையம், குப்புச்சிப்பா ளையம், நன்செய் இடை யாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, அண்ணா நகர், செல்லப்பம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற் றிலை போன்ற ரகங்களை பயிர் செய்துள்ளனர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டு கின்றனர். இதனை உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலையை வாங்கி, லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக் கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ. 3 ஆயிரத்து 200-க்கும் ஏலம் போனது.

    வெற்றிலை வரத்து குறைந்ததாலும், முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.     

    • மார்க்கெட்டுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது
    • வியாபாரிகள் வேதனை

    வேலுார்:

    வேலுார் நேதாஜி காய் கறி மார்க்கெட்டில், வரத்து குறைவால் கத்திரிக்காய் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது.

    வேலுார் நேதாஜி காய் கறி மார்க்கெட்டுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காய் கறி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது.

    அதேநேரம், இப்போது தெருக்கள்தோறும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும், தலையில் சுமந்து சென்றும் காய்கறி விற்கின்றனர். மேலும், சாலை களின் அருகில் ஆங்காங்கே தார்ப்பாய் விரித்தும் காய் கறி விற்கப்படுகிறது.

    இதனால், வேலுார் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வரு வோர் எண்ணிக்கை நாளுக் குநாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், அங் குள்ள வியாபாரிகள், தின மும் ஏராளமாக வரக்கூடிய காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் திணறு கின்றனர்.

    இந்நிலையில், வேலுா ரில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து காணப்பட்ட போதிலும், வரத்து குறைவால் கத்தரிக்காய் கிலோ 80 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

    வேலுார் நேதாஜி மார்க் கெட்டில் மற்ற காய்கறிகளின் நேற்றைய விலை விவரம் (கிலோவில்):-

    தக்காளி 10, வெங்காயம் - 20, சாம் பார் வெங்காயம்- 70; உரு ளைக்கிழங்கு - 18, கேரட் -40, பீட்ரூட் – 25, அவ ரைக்காய் - 50, முருங்கைக் காய் - 40, பீன்ஸ் - 40 முதல் 60 ரூபாய்க்கும், பூண்டு-70 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • இங்கு விளையும் வாழைத்தார்கள் பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிப்பாளை யம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள வாழைத்தார் விற்பனை சந்தைக்கு நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4-க்கு ஏலம் போனது.

    சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் திரு விழாக்கள் நடைபெற்று வருவதாலும், வரத்து குறைந்தாலும் வாழைத்தார்க ளின் விலை உயர்வ டைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள், பெரிய அளவிலான மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர்.

    மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். இந்நிலையில், தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1500 வரை உயர்ந்து, ரூ.10,500-க்கு விற்பனையாகிறது.

    அதே போல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.10,500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1500 வரை உயர்ந்து, ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து குறைவாலும், ஜவ்வரிசி விலை உயர்ந்துள்ளதாலும் மரவள்ளி கிழங்கின் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.
    • மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலை

    களுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையா ளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கு விற்ப னையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை உயர்வடைந்து ரூ.9ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.9ஆயிரத்து 500 விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு வகையான வாழைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்–இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர், பொலிகல் பாளையம், மஞ்சம்பாளையம், வடகரையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்திவேலூர் வாழைத்தார் விற்பனை ஏல சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் , மொந்தன் வாழைத்தார் ரூ.500-க்கும் ஏலம் போனது.

    பல்வேறு கோவில்களில் நடைபெறும் விழாக்கள் சம்பந்தமாக வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளது. இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • இன்று காலை‌ கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் கறிக்கோழியின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழியின் தேவை, உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு மேலும் ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.112 ஆக இருந்த கறிக்கோழி விலை, ரூ.114 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அதில் முட்டை கோழியின் தேவை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.85 ஆகவே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    ×