search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் வரத்துக்குறைவால் கத்தரிக்காய் விலை உயர்வு
    X

    வேலூரில் வரத்துக்குறைவால் கத்தரிக்காய் விலை உயர்வு

    • மார்க்கெட்டுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது
    • வியாபாரிகள் வேதனை

    வேலுார்:

    வேலுார் நேதாஜி காய் கறி மார்க்கெட்டில், வரத்து குறைவால் கத்திரிக்காய் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது.

    வேலுார் நேதாஜி காய் கறி மார்க்கெட்டுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காய் கறி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது.

    அதேநேரம், இப்போது தெருக்கள்தோறும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும், தலையில் சுமந்து சென்றும் காய்கறி விற்கின்றனர். மேலும், சாலை களின் அருகில் ஆங்காங்கே தார்ப்பாய் விரித்தும் காய் கறி விற்கப்படுகிறது.

    இதனால், வேலுார் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வரு வோர் எண்ணிக்கை நாளுக் குநாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், அங் குள்ள வியாபாரிகள், தின மும் ஏராளமாக வரக்கூடிய காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் திணறு கின்றனர்.

    இந்நிலையில், வேலுா ரில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து காணப்பட்ட போதிலும், வரத்து குறைவால் கத்தரிக்காய் கிலோ 80 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

    வேலுார் நேதாஜி மார்க் கெட்டில் மற்ற காய்கறிகளின் நேற்றைய விலை விவரம் (கிலோவில்):-

    தக்காளி 10, வெங்காயம் - 20, சாம் பார் வெங்காயம்- 70; உரு ளைக்கிழங்கு - 18, கேரட் -40, பீட்ரூட் – 25, அவ ரைக்காய் - 50, முருங்கைக் காய் - 40, பீன்ஸ் - 40 முதல் 60 ரூபாய்க்கும், பூண்டு-70 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×