search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "human chain rally"

    • ராபர்ட் பேடன் பவுல் பிறந்தநாள் உலக சிந்தனை நாளாக கடை பிடிக்கப்படுகிறது.
    • மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி பேரணியை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    சாரண, சாரணியர் இயகத்தை தோற்றுவித்த ராபர்ட் பேடன் பவுல் பிறந்தநாள் உலக சிந்தனை நாளாக கடை பிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி நெல்லை கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கலி பேரணி இன்று நடைபெற்றது.

    பாளையில் தொடங்கிய பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி தொடங்கி வைத்தார். நேர்முக உதவியாளர் டைட்டஸ் தலைமை தாங்கினார். சாரண, சாரணியர் இயக்க இணைச்செயலாளர் பார்த்த சாரதி, பொருளாளர் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி ஆணையர் முகம்மது ஜாபர், வெங்கடேஷ், இளமதி மற்றும் பலர் செய்திருந்தனர்.

    பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று மாலை நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை தாங்கினார். இதில் சிறிது தூரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்றனர். அப்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    ×