search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HONOR"

    ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. #HONOR10Lite #smartphone



    ஹுவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த EMUI 9.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    செல்ஃபி எடுக்க 24 எம்.பி. முன்பக்க கேமரா, பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ், கைரேகை சென்சார் மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
    - ARM மாலி G54 MP4 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - EMUI 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், வைட், கிரேடியன்ட் புளு மற்றும் கிரேடியன்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் மற்றும் ஹானர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி முதல் துவங்குகிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் மற்றும் ரூ.2800 மதிப்புள்ள க்ளியர்ட்ரிப் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
    ஹூவாய் ஹானர் பிரான்டு நிறுவனம் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் சுமார் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. #honor #smartphone



    ஹூவாய் ஹானர் பிரான்டு இந்தியாவில் தீபாவளி பண்டிகை காலத்தில் சுமார் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஹானர் ஸ்டோர்களில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு விற்பனையில் இது சாத்தியமாகி இருக்கிறது.

    ஹானர் நிறுவன ஸ்மார்ட்போன்களான ஹானர் 9என், ஹானர் 9 லைட், ஹானர் 7எஸ், ஹானர் 9ஐ, ஹானர் 10 மற்றும் ஹானர் 7ஏ உள்ளிட்ட மாடல்கள் சிறப்பு விலையில், பிரத்யேக சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டன.

    பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் பிரபல ஸ்மார்ட்போனாக ஹானர் 9என் இருந்ததாக ஹானர் தெரிவித்துள்ளது. இத்துடன் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனையின் ரூ.12,000 முதல் ரூ.15,000 பிரிவில் ஹானர் 8X அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முந்தைய 2017ம் ஆண்டு தீபாவளி விற்பனையுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஹானர் நிறுவனம் 300% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. 

    சிறப்பு விற்பனைக்கு வாடிக்கையாளர்கள் அளித்திருக்கும் பெருமளவு வரவேற்பு காரணமாக பிளிப்கார்ட் தளத்தில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை வழங்க ஹானர் முடிவு செய்திருக்கிறது.
    ஹூவாய் துணை பிரான்டான ஹானர் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Honor8X



    ஹூவாய் நிறுவனத்தின் துணை பிரான்டு ஆன ஹானர் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 8X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஹானர் 7X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். 

    ஹானர் 8X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, ஹைசிலிகான் கிரின் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் டூயல் கேமரா யூனிட், 20 எம்.பி. + 2 எம்.பி. சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 



    ஹானர் 8X சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 710 12nm பிராசஸர்
    - மாலி-G51 MP4 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 8X ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.16,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 24-ம் தேதி அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் புதிய ஹானர் 8X ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5, சியோமி Mi ஏ2, மோட்டோரோலா ஒன் பவர் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஹூவாய் நிறுவனத்தின் துணை பிரான்டான ஹானர் உருவாக்கி வரும் ஸ்லைட் போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Honormagic2



    ஹூனர் பிரான்டு மேஜிக் 2 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் புதிய டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

    2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட மேஜிக் 2 ஸ்மார்ட்போன் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. புதிய மேஜிக் 2 ஸ்மார்ட்போன் மூலம் ஸ்லைடர் கேமராவை ஹானர் வழங்குகிறது. அந்த வகையில் ஸ்லைடிங் வடிவமைப்பு கொண்ட ஹானர் ஸ்மார்ட்போனின் டீசர் இணையத்தில் வலம் வருகிறது.

    அதன்படி ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்லைடிங் கேமரா அம்சம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதன் கேமரா ஸ்லைடர் மேஜிக் ஸ்லைட் என அழைக்கப்பட இருப்பது புதிய டீசரில் அம்பலமாகியுள்ளது.



    சீனாவின் பிரபல வீடியோ வலைதள் ஒன்றில் ஹானர் மேஜிக் 2 டீசர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது புதிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ போன்று காட்சியளிக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் ஸ்லைடிங் அம்சம் டீஸ் செய்யப்பட்டு இருந்த நிலையில், இம்முறை சில விவரங்கள் கிடைத்திருக்கிறது.

    அந்த வகையில் ஸ்மார்ட்போனில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு ஸ்மார்ட்போனின் இடதுபுறம் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் ஃபிளாஷ் லைட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. 

    முன்னதாக வெளியான விவரங்களில் ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    ஹானர் நிறுவனம் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்த ஹானர் மேஜிக் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய மேஜிக் 2 ஸ்மார்ட்போன் உருவாகியுள்ளது.
    ஊட்டியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மரியாதை செலுத்தினார்.
    ஊட்டி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து காதி அங்காடியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கதர் ஆடைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மக்கள் ஆரம்ப காலத்தில் கதர் ஆடைகள், போர்வைகள், துணிகளை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். தற்போதும் கிராமப்பகுதிகளில் கதர் ஆடைகள் பயன்பாடு இருந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 2018-2019-ம் ஆண்டிற்கு ரூ.72 லட்சம் மதிப்பிற்கு கதர் ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது. கதர், பட்டு, பாலியஸ்டர் துணி ரகங்களுக்கு 30 சதவீதம், வெப்ப ஆடையாக பயன்படுத்தப்படும் உல்லன் துணிகளுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலக பகுதிகளில் தற்காலிகமாக கதர் ஆடைகளை விற்பனை செய்ய விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கதர் ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் கிராம கதர் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களை மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், காதி அங்காடி உதவி மேலாளர் கனகலதா, மத நல்லிணக்க அமைதிக்குழு தலைவர் கிருஷ்ணன், செயலாளர் முகமது அலி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை சீன நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக அறிவித்துள்ள நிலையில், பயனர் தகவல்களை சேகரிக்கவுமில்லை, சேமிக்கவுமில்லை என ஹூவாய் அறிவித்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை சேகரிக்கவும் இல்லை அவற்றை சேமிக்கவும் இல்லை என அறிவித்துள்ளது.

    முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை ஹூவாய் உள்பட நான்கு சீன நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதை ஒப்புக் கொண்டிருந்தது. அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அறிவிக்கப்பட்ட ஹூவாய் நிறுவனத்துடன் தகவல் பரிமாற்றம் செய்தது, ஃபேஸ்புக் மீது மீண்டும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

    சீனாவை சேர்ந்த ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் நிறுவனம், தனது பயனர் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தமிட்டிருக்கிறது. எனினும் இந்த ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள் கட்டுப்பாடுகளுடன் ஃபேஸ்புக் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டன என ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொபைல் ஒப்பந்த பிரிவுக்கான துணை தலைவர் ஃபிரான்சிஸ்கோ வரெலா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிக்கை, நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்புக்கு பதில் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. டைம்ஸ் பத்திரிக்கை செய்தியில் ஃபேஸ்புக் எவ்வாறு அதன் பயனர்களின் தகவல்களை மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கியது என்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தது.


    கோப்பு படம்

    ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் டேட்டா பகிர்ந்து கொள்வது குறித்த ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஒப்பந்தங்களின் மூலம் 2007-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் தளத்தை மொபைலில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்றன.

    "ஹூவாய் மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஏபிஐ - அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரம் சட்ட ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன சர்வர்களுக்கு வழங்கவில்லை என்பதை எவ்வாறு விளக்கும் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்," என புலனாய்வு பிரிவு துணை தலைவர் மார்க் வார்னர் தெரிவித்துள்ளார்.

    ஹூவாய் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி வாடிக்கைாயளர்களின் தகவல்கள் ஹூவாய் சர்வர்களில் சேமிக்கப்படாமல், வாடிக்கையாளர் சாதனத்தில் தான் சேமிக்கப்பட்டது என்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வரெலா தெரிவித்தார்.

    ஹூவாய் சார்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பயனர் சேவையை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது என ஹூவாய் தெரிவித்துள்ளது. “மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே ஹூவாய் நிறுவனமும் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தளத்தின் சேவைகளை பயனர்களுக்கு மிக எளிமையாக வழங்கப்பட்டன,” என ஹூவாய் நிறுவன செய்தி தொடர்பாளர் ஜோ கெல்லி தெரிவித்துள்ளார். 

    “ஹூவாய் நிறுவனம் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை கேகரித்து, சேமிக்கவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
    ஹானர் நிறுவனத்தின் புதிய ஹெட்போன் உலகின் முதல் முறை அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    ஹூவாய் சப்-பிரான்டு நிறுவனமான ஹானர் தனது க்ளியர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    ஹானர் க்ளியர் ஹெட்போன் உலகில் முதல்முறையாக ரியல்-டைம் இதயத்துடிப்பு டிட்டெக்ஷன் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் உங்களது இதயத்துடிப்பை டிராக் செய்து, உங்களை அமைதிப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி (Heart Rate Variability-HRV) அளவுகளை ஆய்வு செய்து, உடனடி பரிந்துரைகளை இந்த ஹெட்போன் வழங்கும்.

    ஹை-ரெஸ் ஆடியோ பிளேபேக் வசதியை ஹானர் க்ளியர் கொண்டிருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ அனுபவமானது குறைந்த பிட்ரேட் கொண்ட ஆடியோக்களையும் அதிக துல்லியமாக, உயர் ரகத்தில் கேட்க வழி செய்யும். இதன் ரியல்-டைம் ஹார்ட் ரேட் டிட்டெக்ஷன் வலது புற இயர்பட்-இல் பொருத்தப்பட்டிருக்கும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் மானிட்டர் மூலம் டிராக் செய்யப்படுகிறது.

    ஹார்ட் ரேட் மானிட்டரிங் அம்சம் ஹூவாய், ஹானர் ஸ்மார்ட்போன்களை போன்றே ஹூவாய் ஹெல்த் ஆப் கொண்டிருக்கும் மற்ற ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும் என ஹானர் தெரிவித்துள்ளது. இந்த ஹெட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் ஹார்ட் ரேட் இன்டெக்ஸ் சீனாவை சேர்ந்த அறிவியில் குழுமத்தின் உளவியல் பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ளது.



    இந்த சாதனம் பயனரின் உளவியல் சார்ந்து மன அழுத்தத்தை இயக்கி, அதற்கேற்ற ஹார்ட் ரேட் இன்டெக்ஸ் தகவல்களை வழங்கும். இதன் இயர்பட்கள் மிகவும் மென்மையாகவும், மனித தோல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையிலும், நீண்ட நேர பயன்பாடுகளிலும் சவுரகரியமாக இருக்கும் படி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஹானர் க்ளியர் ஹெட்போன்களின் இயர் ஃபின்கள் மற்றும் இயர்-டிப்கள் மூன்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இத்துடன் MEMS மைக்ரோபோன், இன்-லைன் மியூசிக் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. 

    வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும் ஹானர் க்ளியர் ஹெட்போன் சீனாவில் 129 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,350) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சீனாவில் இன்று (ஜூன் 7) முதல் துவங்குகிறது. இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களை சேதங்கள் மற்றும் பாதிப்புகளில் இருந்து சரி செய்யும் புதிய திட்டத்தை ஹூவாய் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஹூவாய் இந்தியா மற்றும் ஒன்அசிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தேர்வு செய்யப்பட்ட ஹூவாய் மற்றும் ஹானர் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு குறைந்த விலையில் இன்சூரன்ஸ் வழங்குகிறது.

    புதிய திட்டத்தின் கீழ் ஹூவாய் மற்றும் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கான இன்சூரன்ஸ்-ஐ அமேசான் வலைத்தளத்தில் இருந்து பெற முடியும். ஹூவாய் பிரான்டு ஸ்மார்ட்போன்களுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களின் விலை ரூ.1,249 முதல் துவங்குகிறது. இதற்கான  வேலிடிட்டி திட்டம் ஆக்டிவேட் செய்யப்பட்டது முதல் ஒரு ஆண்டுக்கு வரை வழங்கப்படுகிறது. 

    ஹூவாய் அறிவித்திருக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தில் ஹூவாய் P20 ப்ரோ, ஹூவாய் P20 லைட் மற்றும் அனைத்து ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், ஹூவாய் இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு விபத்து அல்லது தண்ணீர் மூலமாக பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்து கொள்ள முடியும். இதுதவிர இலவச பிக்கப் மற்றும் டிராப் வசதி, 24X7 உதவி, கேஷ்லெஸ் க்ளெயிம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. 

    ஹூவாய் இன்சூரன்ஸ் சலுகையின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கும் இலவச பிக்கப் மற்றும் டிராப் சேவைகள் இந்தியா முழுக்க பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×