search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home guard"

    • ஆயுதப்படை மைதானத்தில் நடந்த தேர்வில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெறுபவர்களுக்குரூ.560 ஊதியத்தில் மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு பாளை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    மாநகர போலீஸ் கமிஷனர் அபினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா மேற்பார்வையில் நடைபெற்ற தேர்வில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

    மாநகர பகுதியில் காலியாக உள்ள 39 ஆண்கள் மற்றும் 7 பெண்களுக்கான பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இன்று கலந்து கொண்டவர்கள் சான்றிதழ், ஆவணங்களை உதவி கமிஷனர் சரவணன், மாநகர ஊர்க்காவல் படையின் வட்டார தளபதி சின்னராஜா, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் டேனியல் கிருபாகரன், ஊர்க்காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பவுல் ஞானபிரகாசம் ஆகியோர் அடங்கிய குழுவினர் சரிபார்த்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு தேர்வு நடத்தபடும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு தினமும் ரூ.560 ஊதியத்தில் மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும். இதைத் தொடர்ந்து ஊர்க்காவல் படையில் தேர்வு செய்யப்படு பவர்கள் என்ன செய்ய வேண்டும். அவர்களுக்கான விதிமுறைகள், தகவல்கள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. 

    • நெல்லையில் ஊர்காவல் படைக்கு 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்ைல மாநகர போலீஸ் கமிஷனர் அவிநாஷ் குமார் உத்தரவுப்படி, மாநகர ஊர்காவல் படையில் புதிதாக ஊர்காவல் படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இந்த தேர்வு நடக்கிறது. 39 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.

    தேர்வுக்கு வருபவர்கள் கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, கல்வி தகுதிச் சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்), இருப்பிட சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்) ஆகியவற்றுடன் ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஊர்க்காவல் படையினர் இன்று சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியதையடுத்து மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படையினர் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    பாதுகாப்பு பணி இல்லாத நேரங்களில் இவர்கள் சொந்த வேலையை பார்க்க சென்று விடுவார்கள். இவர்கள் போலீசாருக்கு உரிய சீருடையில் பணிபுரிவார்கள். ஆனால் இவர்களுக்கு சம்பளம் போலீசாரை விட குறைவு.

    இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் வட மாநில தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். அங்கு போலீசாருக்கு இணையாக ஊர்க்காவல் படையினருக்கும் சம்பளம் வழங்கப்படுவதை அறிந்தனர்.

    இதையடுத்து தமிழகம் திரும்பிய அவர்கள் தங்களுக்கும், போலீசாருக்கு இணையான சம்பளம் வழங்க கோரி கடந்த வாரம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்தினார்கள். அன்று மாலை தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்க்காவல் படையினர் இன்று சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கிளம்பி வருவதாக கூறப்பட்டது.

    இதையடுத்து மெரினா கடற்கரையிலும் எழிலகம் எதிரிலும், நேப்பியர் பாலம் அருகிலும், தலைமை செயலகம் முன்பும் இன்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மேலும் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    ஜம்மு-காஷ்மீரில் நாளை நகராட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பிரிவினவாத இயக்கத் தலைவர் மிர்வாயிஸ் உமர் பாரூக் இன்று வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களும், பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்தார்.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது.
    நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசீன் மாலிக் ஸ்ரீநகரின் அபி குஸார் பகுதியில் உள்ள அலுவலகத்தில் கடந்த இரண்டாம் தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (8-ம் தேதி) தொடங்குவதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மிதவாத ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவரான மிர்வாயிஸ் உமர் பாரூக் இன்று போலீசாரால் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.

    இதேபோல், ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானியும் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #J&KULBpolls #Mirwaizunderhousearrest
    ×