search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Help"

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
    • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 402 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், செவித்திறன் குறைபா டுடைய மற்றும் பார்வை த்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்ளும் வகையில் தலா ரூ.13,350 வீதம் ரூ.10,01,250 மதிப்புடைய தக்க செயலிகளுடன் கூடிய கை-பேசி 75 நபர்களுக்கும், ரூ.85,000 மதிப்புடைய இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஒரு நபருக்கும் மற்றும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 5 திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்கிட தலா ரூ.50,000 வீதம் ரூ.2,50,000 மானியத் தொகைக்கான ஆணைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.இக்கூட்டத்தில், வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • 5234 போலீசார் சார்பில் ரூ.16.27 லட்சம் நிதி வழங்கப்பட்டது
    • கரூர் எஸ்.பி.சுந்தரவதனம் வழங்கினார்

    கரூர்,

    சாலை விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 34) இவர், திண்டுக்கல் மாவட்டம், பழநியில், சிறப்பு காவல் படை போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம், சாலை விபத்தில், அஜித் உயிரிழந்தார். இதையடுத்து, 'காக்கும் உறவுகள்' 2017 பேட்ஜ் சார்பில், 36 மாவட்டங்களில், 5,324 போலீசார் மூலம், 16 லட்சத்து 27 ஆயிரத்து 439 ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியானது அஜித் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ். பி., சுந்தரவதனம், அஜித் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

    • 285 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
    • கலெக்டர் பிரபு சங்கர் தகவல்

    கரூர்,

    ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக(தாட்கோ) திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை கரூர் மாவட்டத்தில், 285 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே,39 லட்சத்து,27 ஆயிரத்து,721 மதிப்பிலான கடனுதவியும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 136 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே,39 லட்சத்து,98 ஆயிரத்து,067 மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 115 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.1 கோடியே,17 லட்சத்து,69 ஆயிரத்து,654 மதிப்பிலான கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் 34 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.81 லட்சத்து,60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி என மொத்தம் 285 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே,39 லட்சத்து,27 ஆயிரத்து,721 மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்கள்.

    • மக்கள் தொடர்பு முகாமில் வழங்கப்பட்டது
    • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வட்டம், பெருங்களுர் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில், 1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் அவர் கூறும்போது,தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்களை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பெருங்களுர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும்.இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதிகளில் வாழும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றிடும் வகையில் 

    • கடந்த பதிமூன்று வருடங்களாக யாசக பணத்தை பொது நிவாரண நிதிக்கு அளித்து வருகிறார்
    • நானூறு பள்ளிகளுக்கு உதவி செய்துள்ளார்

    பெரம்பலூர்,

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, ஆழங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் (வயது 73) என்பவர் வந்தார். அவர், தான் யாசகம் பெற்றதன் மூலமாக கிடைக்கப்பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் சென்றார். இது குறித்து பூல்பாண்டியன் கூறுகையில், நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன். இதுவரை 35 மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ரூ.10 ஆயிரத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தி, மாவட்ட கலெக்டரிடம் ரசீதை கொடுப்பதை வாடிக்கையாக செய்து வருகிறேன் என்று அவர் கூறினார்.

    பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கண்காட்சி வைத்திருந்தனர்

    குளித்தலை:

    குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம் ஊராட்சி பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மக்கள் குறைகள் குறித்து பல்வேறு மனுக்களை பெற்றனர். இதில் பெறப்பட்ட மனுக்களை தீர்வு கண்டு மாவட்ட கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கண்காட்சி வைத்திருந்தனர். இதனை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு விழாவில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 357 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 2 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பல்வேறு துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள், சிவாயம் ஊராட்சி தலைவர் திருமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 2021-2022-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய வங்கிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மகளிர் குழுக்களுக்கு அதிக கடன் உதவி வழங்கிய வங்கிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2021-2022-ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய வங்கிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மகளிர் குழுக்களுக்கு அதிக கடன் உதவி வழங்கிய வங்கிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

    மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி சிறப்பாக செயலாற்றிய, சிறந்த வங்கிகளுக்கான விருது இந்தியன் வங்கி மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது.

    சிறந்த வங்கி கிளை–களுக்கான விருதுகளில் முதலிடம் பெற்ற இந்தியன் வங்கி, மைக்ரோசெட் ராசிபுரம் கிளைக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.15,000-க்கான உத்தரவு, 2-ம் இடம் பெற்ற கனரா வங்கி திருச்செங்கோடு கிளைக்கு, நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.10,000-க்கான உத்தரவு, 3-ம் இடம் பெற்ற தமிழ்நாடு கிராம வங்கி நாமகிரிப்பேட்டை கிளைக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது தொகை ரூ.5,000-க்கான உத்தரவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அரசால் கோரப்படும் சான்றுகளை நாளை மறுநாளுக்குள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    • மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் நடுக்குவாதம் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மருத்துவ சான்றுடன், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இந்த அலுவலகத்தில் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதுநாள் வரை மேற்கண்ட சான்றுகள் வழங்காத மாற்றுத்திறனாளி நபர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை மறுநாளுக்குள் (திங்கட்கிழமை) வழங்கிட வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட சான்றுகளை வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்க இயலாது என்று கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது
    • 17 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 920 மதிப்பீட்டில் உதவித் தொகைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், யுனைடெட் வே ஆப் சென்னை நிறுவனத்திடமிருந்து நிதியுதவிகள் பெறப்பட்டது. அதன்படி, கொரோனாவால் கணவரை இழந்த தாய்மார்களுக்கு வாழ்வாதார உதவிகள் பெறும் 10 தாய்மார்களுக்கு மின்மோட்டாருடன் இணைந்த தையல் இயந்திரம், பெரிய கிரைண்டர், கறவைமாடு, தள்ளுவண்டிக் கடை, ஆடு அல்லது மாடு வாங்குவதற்காக ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலான உதவித் தொகைகளும், மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்லூரி கல்வி நிதி உதவிகள் பெறும் 7 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 420 மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகைகளும் என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 920 மதிப்பீட்டில் உதவித் தொகைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, யுனைடெட் வே ஆப் சென்னை திட்ட அலுவலர் ஜெரசலோ வினோத், யுனைடெட் வே ஆப் சென்னை உதவி மேலாளர் அபிராமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவிகள் நிதி உதவி அளித்தனர்.
    • மின் மோட்டார், குப்பை கூடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1996-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவிகள் ஒருங்கிணைந்து ''எவர் கிரீன் 96'' நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில் நடத்தினர். தலைமை ஆசிரியர் ஆஷா தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர்-கவுன்சிலர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவி பிரியா வரவேற்றார். ராஜயோக தியானம் கூடத்தின் அமைப்பாளர்-ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளிடம் மலரும் நினைவுகளை பகிர்ந்தார்.

    விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் முன்னாள் மாணவிகள் சார்பில் மின் மோட்டார், குப்பை கூடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சுசீலா தேவி செய்திருந்தார். சித்ரா தொகுத்து வழங்கினார். ஜெயந்தி நன்றி கூறினார்.

    • விபத்தில் காயமடைந்த குழந்தையின் மேல் சிகிச்சைக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உதவினார்.
    • குடும்பத்துடன் வந்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமிகோவில் தெருவில் நீதி மன்றம் அருகே உள்ள சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு பவித்ரா லட்சுமி, ரன்விதா, ராஜேஷ், கார்த்திகா ஆகியோர் குடும்பத்துடன் வந்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்தனர்.

    அவர்கள் கூறுகையில், 5 மாதங்களுக்கு முன்பு சிவகாசி செல்லும்போது குடும்பத்துடன் விபத்துக்கு ள்ளாகி சிகிச்சை பெற்றோம். தற்போது குழந்தையின் மேல்சிகிச்சைக்காக பண உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைகேட்ட தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உடனடியாக தனது சொந்த செலவில் ரூ.15 ஆயிரத்தை வழங்கியதுடன் டாக்டரிடம் பேசி உயர்ரக மருத்துவ சிகிச்சையை குழந்தைக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

    தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, வார்டு செயலாளர்கள் குழந்தைவேலு, இக்சாஸ், மாயாவி, மதன் ராம்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

    • 1291 பயனாளிகளுக்கு ரூ.2.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • பொன்னமராவதி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் தேனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கலந்து கொண்டார்.

    மேலும் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 1291 பயனாளிகளுக்கு ரூ 2.08 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அப்போது பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    மேலும் அரசின் பல்வேறு துறைகளைச்சார்ந்த அலுவலர்கள் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து பேசினர். முகாமில் தோட்டக்கலைத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. முகாமில் பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இதில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, தேனூர் ஊராட்சிமன்றத்தலைவர் வி.கிரிதரன், வட்டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×