search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Soup"

    நெல்லிக்காய் வயிற்றுக் கோளாறு, வாய்வுக் கோளாறு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இன்று நெல்லிக்காய் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய வெங்காயம் - 1
    நெல்லிக்காய் 3
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    தண்ணீர் - 4 கப்
    சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு


    செய்முறை  :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நெல்லிக்காயை வேகவைத்து கொள்ளவும். வேக வைத்த நெல்லிக்காயில் உள்ள தண்ணீரை தனியாக வைக்கவும். நெல்லிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் சோள மாவை சேர்த்து வறுக்கவும்.

    அடுத்து அதில் நெல்லிக்காய், நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    கடைசியாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது ஓட்ஸ். இன்று ஓட்ஸ், முட்டை சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 100 கிராம்
    மக்காச்சோளம் - கால் கிலோ
    மிளகு தூள் - சிறிதளவு
    சோயா சாஸ் - சிறிதளவு
    வெங்காயம் - 1
    முட்டை வெள்ளைக்கரு - 1
    பால் - அரை கப்
    இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    ஓட்ஸ்சுடன் பால், தண்ணீர் சேர்த்து காய்ச்சி கொள்ள வேண்டும்.

    மக்காசோளத்தை வேக வைத்து கொள்ளவும்.

    முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் ஓட்ஸ் கலவையும், முட்டையின் வெள்ளைக்கருவையும் நுரை பொங்க அடித்து சேர்த்து கிளறிவிட வேண்டும்.

    இறுதியில் மிளகுத்தூள் சேர்த்து ருசிக்கலாம்.

    ஓட்ஸ் - முட்டை சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இனிப்பு சோளம், முட்டை சேர்த்து சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இனிப்பு சோளம் - 1 கப்
    வெஜிடபிள் ஸ்டாக் (காய்கறி வேகவைத்த தண்ணீர்) - 1 லிட்டர்
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    பால் - 1 கோப்பை
    முட்டை -  1
    அஜினோ மோட்டோ - 1/2 தேக்கரண்டி
    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
    சோள மாவு  - 1 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    இனிப்பு சோளத்தை வேகவைத்து கொள்ளவும்.

    சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் பால், வேக வைத்த சோளம், வெஜிடபிள் ஸ்டாக்கையும் (காய்கறி வேகவைத்த தண்ணீர்) சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

    சூப் இரண்டு கொதி வந்தவுடன் முட்டையை உடைத்து மெதுவாக விடவும்.

    சூப்பை சுமார் 10 நிமிடம்வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். அஜினோ மோட்டொவைச் சேர்க்கவும்.

    சூப்பை வடிகட்டாமல் சூடாகப் பரிமாறவும்.  

    சூப்பரான சத்தான இனிப்பு சோளம் - முட்டை சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முள்ளங்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குக் குளிர்ச்சியை அளிக்கும். இன்று முள்ளங்கி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :      

    முள்ளங்கி - ஒன்று
    இஞ்சி - சிறிய துண்டு  
    வெண்ணெய் - சிறிதளவு  
    மிளகுத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்  
    பூண்டு - 2 பல்  
    முளைகட்டிய பச்சைப்பயறு - 2 டேபிள்ஸ்பூன்  
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :     

    முள்ளங்கியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.

    குக்கரில் முள்ளங்கியுடன் இஞ்சி, சீரகம், பூண்டு, பச்சைப்பயறு. உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும்.

    ஆறியதும் குக்கர் மூடியை திறந்து மத்தால் மசிக்கவும்.

    சூடாக சூப் பவுலில் ஊற்றி வெண்ணெய் சேர்த்துக் கலந்து, மிளகுத்தூள் தூவிப் பருகலாம்.

    சூப்பரான முள்ளங்கி சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேரட் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், சோயா சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோயா - 100 கிராம்,
    துருவிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    தனியா, சோம்பு, சீரகம், மிளகாய், மஞ்சள் தலா - 1 டீஸ்பூன்,
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்,
    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    நெய் - 1/2 டீஸ்பூன்,
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1.



    செய்முறை :

    சோயாவை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் சோயா மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு, மசாலா வகைகளை சேர்த்து நன்கு வேக விடவும்.

    கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    சத்தான கேரட் - சோயா சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் கோதுமை ரவை, வெஜிடபிள் சேர்த்து சூப் செய்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    விருப்பமான காய்கறிகள் - 1 கப்,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    பருப்பு வேக வைத்த தண்ணீர் - 1 அல்லது 1 1/2 கப்,
    பட்டை - 1,
    கிராம்பு - 1,
    ஏலம் - 1,
    இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி,
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
    எண்ணெய் - 1 தேக்கரண்டி,
    கொத்தமல்லி இலை - சிறிது,
    உப்பு - தேவைக்கேற்ப,
    கோதுமை ரவையில் சமைத்த சாதம் - 2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை


    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.

    உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்

    இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பருப்பு வேக வைத்த நீரை சேர்த்து வேகவிடவும்.

    வெந்ததும், கோதுமை ரவை (பெரியது) சமைத்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    கடைசியாக உப்பு, மிளகுத்தூள் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.

    கோதுமை ரவை வெஜிடபிள் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று ஆப்பிளை வைத்து சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சை ஆப்பிள்  -  4
    பெரிய வெங்காயம் - 1/2 கிலோ  
    உப்பில்லாத வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
    சமையல் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
    பூண்டு - 2 பல்
    முந்திரி - 10
    உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
    காய்கறி சத்து நீர் - 3 கப்

    காய்கறி சத்து நீர் தயாரிக்கும் முறை

    இதனைத் தயாரிக்க பூண்டு வெங்காயம், கேரட், பிரிஞ்சி இலை, உங்கள் வீட்டில் இருக்கும் காய்கறிகளில் ஏதேனும் 4 - 5 சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் பூசணி, பட்டாணி, பீன்ஸ் என பல வகைகளை சேர்த்து கொள்ளலாம். காய்கறிகளை நன்கு கழுவ வேண்டும்.

    தோல் நீக்காமல் காய்களை வெட்டிக் கொள்ளலாம். பூண்டு தவிர மற்ற காய்கறிகளை சம அளவு எடுத்துக் கொள்ளலாம். பூண்டு 4 - 5 பல் போதும். மொத்த காய்கறிகள் எந்த அளவு இருக்கின்றதோ அந்த அளவு நீர் சேர்த்து 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை மிக மிக மெல்லிய தீயில் வேக விடுங்கள். பின்னர் 1 மணி நேரம் அதனை மூடி வைத்து காய்கறி சத்து நீரினை நன்கு வடித்து எடுத்து விடுங்கள்.)

    சிலர் காய்கறிகளை 2 விசில் வரும் வரை வேகவிட்டு அப்படியே மிக்சியில் கூழாய் அரைத்து விடுவர். இது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்தது. இந்த சத்து நீரில் உருளை, சேனை, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளி போன்றவற்றினை சேர்ப்பதில்லை. இப்பொழுது காய்கறி சத்து நீர் ரெடியாகி விட்டது. இது அதிகமாக இருப்பின் பிரிட்ஜில் வைத்து மறு நாளும் பயன்படுத்தலாம்.



    செய்முறை

    ஆப்பிள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை நசுக்கி கொள்ளவும்.

    முந்திரியை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

    கனமான பாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்து மிதமாக சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் நசுக்கிய பூண்டு, காய்கறி சத்து நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    பின்னர் முந்திரி விழுது சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

    ஆறிய பின் மிக்சியில் ஒரு நிமிடம் நன்கு சுற்றி பின்னர் மிதமாய் சுட வைத்து மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இன்று இந்த கிழங்கை வைத்து சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 1
    வெள்ளைபூண்டு - 4  பல்
    சர்க்கரை வள்ளி கிழங்கு - 1/4 கிலோ
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு.
    தேங்காய் பால் - 3 கப்
    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை:

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி வெட்டிக்கொள்ளவும்.

    கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயம் பின் பூண்டினைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சர்க்கரை வள்ளி கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு (5 நிமிடங்கள்) வதக்கவும்.

    இதில் தேங்காய் பால் சேர்த்து 25 நிமிடங்கள் மிக மிக சிறிய தீயில் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.

    பின் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறிய பின் மிக்சியில் நன்கு சுற்றி மீண்டும் லேசான சூடு செய்து உப்பு, மிளகு தூள் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் தயாரிக்கப்படும் சூப்புகள் மிகவும் சத்தானவை. சூப்பை நம் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுவோம்.
    தேவையான பொருட்கள்  :

    கேரட் - கால் கிலோ காரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது.
    வெங்காயம் - 2
    பீட்ரூட் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு -  5 பல்
    காய்கறி சத்து நீர் - 7 கப்
    உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு



    செய்முறை :

    கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயத்தினை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், இஞ்சி சேர்த்து பின்னர் பீட்ரூட் துண்டுகளும் சேர்த்து 5 நிமிடங்கள் மிக மிதமான சூட்டில் வதக்கவும்.

    இதனுடன் காய்கறி சத்து நீர் சேர்த்து மிக மிக நிதானமான சூட்டில் 25 - 45 நிமிடங்கள் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.

    இதனை ஆற விட்டு மிக்சியில் நன்கு அரைத்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விட்டு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.

    சத்தான சுவையான பீட்ரூட் - கேரட் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் காய்கறி அல்லது கீரை சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று முட்டைக்கோஸ் - கேரட் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைகோஸ் - 1/4 கிலோ
    வெங்காயம் - 1
    இஞ்சி - பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
    மிளகு, சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
    கேரட் - 1
    வெண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் முட்டைக்கோஸ், கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

    முட்டைக்கோஸ் சிறிது வதங்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.

    வெந்தவுடன் திறந்து மிளகு, சீரகப் பொடி சேர்த்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று கோளாறு, வயிற்று உபாதை இருப்பவர்களுக்கு இந்த லெமன் சூப் சிறந்த உணவாகும். இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலுமிச்சைச் சாறு - கால் கப்,
    கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு,
    வெங்காயம் - ஒன்று.
    எலுமிச்சை தோல் - சிறிதளவு,
    காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,
    உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.

    அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை தோல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகலாம்.

    புத்துணர்ச்சி தரும் லெமன் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று ஹெர்பல் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துளசி இலை - அரை கப்,
    வெற்றிலை - 4,
    கற்பூரவல்லி இலை - 2,
    புதினா இலை - கால் கப்,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பூண்டுப் பல் - 2,
    உப்பு - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி, புதினா இலைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    கடாயில் நெய் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

    கழுவிய இலைகளை இதனுடன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    இதில் நீர் விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

    பிறகு, அடுப்பை நிறுத்தி, இலைகளை தனியே எடுத்து மையாக அரைத்து, வேகவைத்த நீரில் மீண்டும் சேர்த்து, ஒரே ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும்.

    பரிமாறும்போது உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×