search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Head Master Suspended"

    திருவண்ணாமலை அருகே பள்ளிக்கு மதுபோதையில் வந்த தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். #headmaster #suspend
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்லங்குப்பம் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அமலதாஸ் பள்ளிக்கு வந்த பிறகு மது அருந்திவிட்டு போதையில் பள்ளி வளாகத்திலேயே படுத்து தூங்குவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது. மீண்டும் மது அருந்தி விட்டு மதுபாட்டிலுடன் பள்ளி வளாகத்திலேயே படுத்து உருண்டார்.

    இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கல்வி அதிகாரிகளுக்கு புகார் செய்தனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீராமலு செல்லங்குப்பம் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடமும், புகார் தெரிவித்த மக்களிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், தலைமை ஆசிரியர் அமலதாஸ் மது போதையில் பள்ளிக்கு வருவதும், மது போதையில் பள்ளி வளாகத்திலேயே தூங்குவதும் உறுதியானது. இதையடுத்து வட்டார கல்வி அலுவலர், விசாரணை அறிக்கையை திருவண்ணாமலை கல்வி மாவட்ட அலுவலகத்தில் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் கல்வி மாவட்ட அலுவலர் உஷாராணி மதுபோதையில் பள்ளிக்கு வந்த அமலதாசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  #headmaster #suspend
    கலசப்பாக்கம் அருகே 5-ம் வகுப்பு மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் ஆதமங்கலம் புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியராக சுப்பிரமணியன் என்பவர் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறாள்.

    இந்த நிலையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தனக்கு தலைவலி உள்ளது. தைலம் தேய்த்து விடுமாறு கூறி 5-ம் வகுப்பு மாணவியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அந்த மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் யாரிடமும் இதுப்பற்றி கூறக் கூடாது என்று மாணவியை மிரட்டியுள்ளார். மாலையில் வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி தன்னிடம் தலைமை ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதை பெற்றோரிடம் கூறினாள்.

    ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். மேலும் தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். தகவலறிந்ததும், கடலாடி போலீசார் விரைந்து வந்தனர்.

    பெற்றோரை சமரசப்படுத்திய போலீசார், தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் தலைமை ஆசிரியரை பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×