search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கு மதுபோதையில் வந்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
    X

    பள்ளிக்கு மதுபோதையில் வந்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

    திருவண்ணாமலை அருகே பள்ளிக்கு மதுபோதையில் வந்த தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். #headmaster #suspend
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்லங்குப்பம் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அமலதாஸ் பள்ளிக்கு வந்த பிறகு மது அருந்திவிட்டு போதையில் பள்ளி வளாகத்திலேயே படுத்து தூங்குவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது. மீண்டும் மது அருந்தி விட்டு மதுபாட்டிலுடன் பள்ளி வளாகத்திலேயே படுத்து உருண்டார்.

    இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கல்வி அதிகாரிகளுக்கு புகார் செய்தனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீராமலு செல்லங்குப்பம் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடமும், புகார் தெரிவித்த மக்களிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், தலைமை ஆசிரியர் அமலதாஸ் மது போதையில் பள்ளிக்கு வருவதும், மது போதையில் பள்ளி வளாகத்திலேயே தூங்குவதும் உறுதியானது. இதையடுத்து வட்டார கல்வி அலுவலர், விசாரணை அறிக்கையை திருவண்ணாமலை கல்வி மாவட்ட அலுவலகத்தில் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் கல்வி மாவட்ட அலுவலர் உஷாராணி மதுபோதையில் பள்ளிக்கு வந்த அமலதாசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  #headmaster #suspend
    Next Story
    ×