search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka seller arrested"

    • குட்கா விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • மளிகை கடையில் இருந்து 97 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் செம்மாண்டம் பாளையம் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கருமத்த ம்பட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ராஜதுரை உத்தரவின் பேரில் போலீசார் செம்மாண்டம் பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மளிகை கடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதில் 97 கிலோ குட்கா கருமத்தம்பட்டி போலீசாரல் கைப்பற்றப்பட்டது மேலும் மளிகை கடை உரிமையாளரான மணிகண்டன்(33) கைது செய்யப்பட்டார். இவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் வேடசந்தூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • கஞ்சா, குட்கா பொருட்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

    வேடசந்தூர்:

    தென்மண்டல ஐ.ஜி தனிப்பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுக்காம்பட்டியில் குட்கா விற்ற சிவக்குமார்(46), கவாஸ்கர்(30), முத்துச்சாமி(57) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த தமிழரசன்(21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சாைவ பறிமுதல் ெசய்தனர்.

    கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருட்களை வேடசந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தென்மாவட்டங்களில் கஞ்சா, புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். எனவே கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ஓசூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்,

    ஓசூர் டவுன் போலீசார் அரசு ஆஸ்பத்திரி அருகில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்ற ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர் 20 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா, உள்ளிட்டவை வைத்திருந்தது தெரிய வந்தது. 

    விசாரணையில் அவரது பெயர் பழனிசாமி (வயது 30), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா கிடடம்பட்டி அருகே உள்ள முத்தூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
    ×