search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா விற்றவர் கைது"

    • குட்கா விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • மளிகை கடையில் இருந்து 97 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் செம்மாண்டம் பாளையம் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கருமத்த ம்பட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் ராஜதுரை உத்தரவின் பேரில் போலீசார் செம்மாண்டம் பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மளிகை கடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதில் 97 கிலோ குட்கா கருமத்தம்பட்டி போலீசாரல் கைப்பற்றப்பட்டது மேலும் மளிகை கடை உரிமையாளரான மணிகண்டன்(33) கைது செய்யப்பட்டார். இவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
    • மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கருமத்த ம்பட்டி நான்கு ரோடு அருகில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்தது சோதனையில் தெரிய வந்தது.

    இதனை அடுத்து அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளரிடம் விசாரணை செய்த போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாதாராம் (31), தீபாராம்(25) ஆகியோர் மூலம் இப்பகுதியில் குட்கா பொருள்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து வாகராயம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் இருவருக்கும் உடந்தையாக செயல்பட்ட பிரகாஷ் குமார்(40), ரஞ்சித் குமார் (26), சோகரம் (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் , பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 354 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

    ×