search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gurupeyarchi"

    பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம், அபிஷேகமும் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் உள்ள மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம், அபிஷேகமும் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அனுமந்தை ஆவணி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவிலில் உள்ள குருபகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் உள்ள ஆவணி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள குருபகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குருவித்துறை கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் முன்பு பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் சுயம்புவாக குருபகவான் உள்ளார். நேற்று முன்தினம் மகரராசியில் இருந்து கும்பராசிக்கு குருப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கொரோனா தொற்றுநோய் காரணமாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுடன் குருப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். யாகபூஜைக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் சன்னதி அடைக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் சன்னதி திறக்கப்பட்டு இரவு 7.30 வரை திறந்திருந்தது.

    அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    பொள்ளாச்சி ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, நவகிரக ஹோமம், அபிஷேகம், அலங்காரம், 1008 சஹஸ்ரநாமம் அர்ச்சனை, மகா தீபாராதனை, நடைபெற்றது.
    பொள்ளாச்சி ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி பூஜை, நவகிரக ஹோமம், அபிஷேகம், அலங்காரம், 1008 சஹஸ்ரநாமம் அர்ச்சனை, மகா தீபாராதனை, நடைபெற்றது.

    இதில், பக்தர்கள் அபிஷேக பொருட்கள், மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை, ஹோமப்பொருட்கள், மலர்கள் போன்ற பொருட்களுடன் பூஜையில் கலந்து கொண்டனர். முன்னதாக, ரிஷபம், கடகம் கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சமூக இடைவெளியிட்டு திரளாக கலந்துகொண்டனர்.
    சூரியனார் கோவில் சிவசூரியபெருமான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவில் கிராமத்தில் சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரகங்களுக்கு என்று பிரதானமாக அமைந்துள்ள இக்கோவிலில் உஷா தேவி, சாயா தேவியுடன் சிவசூரிய பெருமான் மூலவராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் சூரியனை பார்த்தவாறு குருபகவான் அமைந்துள்ளது சிறப்பம்சம் ஆகும்.

    மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குருபகவான் நேற்று முன்தினம் மாலை பெயர்ச்சி அடைந்ததையொட்டி இக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.

    இதில் குருபகவானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    தமிழ் நாட்டில் அனைத்து கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படி விழாக்கள் அனுசரிக்கப்படுவதால் 13.11.2021 அன்று குருப்பெயர்ச்சி விழா நடைபெறும்.
    பிலவ வருடம் கார்த்திகை மாதம் 4-ம் நாள் சனிக்கிழமை 20.11.2021 அன்று இரவு 11.31 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    தமிழ் நாட்டில் அனைத்து கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கப்படி விழாக்கள் அனுசரிக்கப்படுவதால் 13.11.2021 அன்று குருப்பெயர்ச்சி விழா நடைபெறும்.
    நவகிரகங்களில் முழுச் சுபரான  குருபகவானுக்கு மட்டுமே தன் பார்வை பலத்தால் அனைத்தையும் வளம் பெறச் செய்யும் சக்தி உள்ளது. குரு தான் நின்ற இடத்தை விட பார்த்த இடத்தை புனிதப் படுத்துவார். குரு பார்த்த இடம் கோடி நன்மை பெறும்.

    தன் பார்வை பலத்தால் அனைத் தையும் கட்டுப்படுத் தும் சக்தி படைத்த ஒரே ராஜகிரகம் குருபகவான் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மை. அது மட்டுமல்ல குருபகவான் மட்டுமே பணம், திருமணம், புத்திர பாக்கியம், தொழில், உத்தியோக உயர்வு என பாக்கியம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் விருத்தியாக்கும் சக்தி படைத்தவர் என்பதால் தான் மக்களுக்கு குருப்பெயர்ச்சியின் மேல் அதீத ஈடுபாடு உள்ளது.

    அதன்படி குருவின் பார்வை பதியும் மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசியினரும், தன லாப ஸ்தானத்தில் நிற்கும் மகரம், மேஷ ராசியினரும் ஏதாவது ஒரு வகையில் மேன்மை அடைவார்கள். மற்ற ராசிகளுக்கு தான் நின்ற வீட்டிற்கு ஏற்பவும்  தான் பயணம் செய்யும் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்கள் ரீதியாகவும் சுய ஜாதக ரீதியான தசாபுத்திக்கு அடிப்படையிலும் குரு நற்பலன்களை வழங்குவார்.

    அவரவரின் தசாபுத்தியை சாதகப்படுத்தும்  வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகும். ஒரு ராசியில் தோராயமாக ஓராண்டு சஞ்சரிக்கும் குருபகவான் மகரம், கும்பம் என்ற இரண்டு ராசிகளிலும் வக்ரம், அதிசாரம் என மாறி மாறி கடந்த ஒரு வருடமாக சஞ்சாரம் செய்தார்.

    தற்போது கும்பத்தில் 5 மாதங்கள் மட்டுமே சஞ்சரிக்கப் போவதால் எந்த ராசியினருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறலாம். ஏப்ரல் 2022ல் குரு மீனத்திற்குச் செல்கிறார். ராகு மேஷத்திற்கும் கேது துலாத்திற்கும் செல்வதால் பல பெரிய நல்ல மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படப்போவது உறுதி. எனவே இந்த குறுகிய காலத்தை சிறிய எளிமையான இறைவழிபாடு மற்றும் பரிகாரங்கள் மூலம் கடக்க முடியும்.

    மேலும் இந்த காலகட்டத்தில் சனி பகவான் மகரத்திலும், ராகு பகவான் ரிஷபத்திலும் கேது பகவான் விருச்சிகத்திலும் உலாவும் கிரக அமைப்பைப் பொறுத்தும் இந்த குருப்பெயர்ச்சி புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

    இந்த குருப் பெயர்ச்சி அனைவருக்கும் விரும்பிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்திட பிரபஞ்சத்தையும் நவகிரகங்களையும் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யலாம்.
    குருப்பெயர்ச்சி விழாவான இன்று அதிகாலை 2-வதுகால யாகபூஜையும், அதனை தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட உள்ளது.
    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இன்று(சனிக்கிழமை) மாலை 6.31 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. உலக நன்மை வேண்டி விநாயகர் வழிபாட்டுடன், குருபரிகார யாகம் நேற்று மாலை நடைபெற்றது.

    குருப்பெயர்ச்சி விழாவான இன்று அதிகாலை 2-வதுகால யாகபூஜையும், அதனை தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட உள்ளது. குருபகவானுக்கு தங்ககவச அலங்காரமும், கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 6.31 மணிக்கு குருப்பெயர்ச்சியின் போது குருபகவானுக்கு தீபாராதனை காட்டப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார்-உதவிஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர்-செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    குருப்பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் வலங்கைமான் போலீசார் செய்துள்ளனர்.
    குருவித்துறை குருபகவான் குருப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவில் முன்பு பெருமாளை நோக்கி தவக் கோலத்தில் குருபகவான் வீற்றிருக்கிறார். அருகே சக்கரத்தாழ்வார் உள்ளார். இங்கு ஒவ்வொரு குரு பெயர்ச்சியும் 3 நாட்கள் நடைபெற்று விழாக்கோலமாக இருக்கும்.

    இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பார்கள். தற்போது கொரோனா தொற்றுநோய் காரணமாக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இந்தநிலையில் பக்தர்கள் கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ. தாசில்தார் நவநீதகிருஷ்ணன், சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தர், இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் விஜயன், யூனியன் ஆணையாளர்கள் பாண்டியன், சத்தியகலாவதி, வருவாய் ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு யாகசாலை பூஜையில் பங்கேற்க அனுமதி இல்லை. சாமி தரிசனம் செய்ய மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    நேற்று காலை 2-ம் நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இன்று (சனிக்கிழமை) காலை 3-ம் நாள் லட்சார்ச்சனை தொடங்கி பகல் வரை நடைபெறும். பிற்பகல் 3 மணி அளவில் பரிகார பூஜை நடைபெறுகிறது.

    மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய மாலை 6.10 மணி அளவில் குருபகவானுக்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெற்று பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    குருவித்துறை குரு பகவான் கோவில் குருப்பெயர்ச்சி விழாவில் 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சோழவந்தான் அருகே குருவித்துறை குரு பகவான் குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு் பாஸ்கரன் உத்தரவின்பேரில் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தர் ஆலோசனையின் பேரில் குருப்பெயர்ச்சி விழாவில் 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் காவல்துறை சார்பாக அறிவித்துள்ளனர்.
    இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.
    குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மதியம் 2.48 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நாளை அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள் துண்டு, முல்லைப்பூ மாலை, மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்துகொள்வார்கள். மேலும் பரிகார பூஜைகளும் செய்வார்கள்.

    இதைப்போல் சுசீந்திரம் தாளகுளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேஸ்வர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி ஜெயந்தீஸ்வரர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குருபகவான் சன்னதிகள் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நாளை நடக்கிறது.
    பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர்.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். இங்கு ஒவ்வொரு குருபெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு குருபெயர்ச்சி விழாவையொட்டி நேற்று காலை ஸ்ரீதர் பட்டர், ரெங்கநாத பட்டர், சடகோப பட்டர், ஸ்ரீபாலாஜி பட்டர், ராஜா பட்டர் உள்பட 21 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்கியது.

    விழாவை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் விஜயன், செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆய்வாளர் மதுசூதனன்ராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து குருபகவானை தரிசித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் லட்சார்ச்சனை விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இவரை முன்னாள் ஊராட்சி தலைவர் கர்ணன், தொழில் அதிபர் எம்.கே.எம்.ராஜா, மணிவேல் உட்பட பலர் வரவேற்றனர். சமயநல்லூர் துணைசூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குருவித்துறை ஊராட்சி சார்பாக கூடுதல் தெருவிளக்கு, கூடுதல் குடிநீர் வசதி, முழு சுகாதார பணி செய்யப்பட்டது. மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இன்று லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெறும். இரவு நிறைவுபெற்று நாளை பகல் 3 மணி அளவில் பரிகார மகா யாகம் நடைபெறும். 6.10 மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆவதால் குருபகவானுக்கு 21 அபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர். காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்து துறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி அனைத்து விழிப்புணர்வு ஏற்பாடுகளும் செய்துள்ளனர். வரக்கூடிய பக்தர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    குருவித்துறை குருபகவான்கோவில் குருபெயர்ச்சி விழா 11-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்குகிறது. 13-ந் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்பு வாக இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்றும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குரு பெயர்ச்சியாவதை முன்னிட்டு இங்கு 3 நாட்கள் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டு வருகிற 11-ந் தேதி வியாழக்கிழமை 10.45 அளவில் லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    13-ந் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். அன்று மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை தொடங்கி 6.10 மணிக்குள் பரிகார மகாயாகம், மஹாபூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி குருபெயர்ச்சி விழாவின் போது 13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் முழுவதும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், தக்கார் வெண்மணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    ×