search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குருவித்துறை குருபகவான் கோவில்
    X
    குருவித்துறை குருபகவான் கோவில்

    குருவித்துறை குருபகவான் கோவிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா

    குருவித்துறை குருபகவான் குருப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவில் முன்பு பெருமாளை நோக்கி தவக் கோலத்தில் குருபகவான் வீற்றிருக்கிறார். அருகே சக்கரத்தாழ்வார் உள்ளார். இங்கு ஒவ்வொரு குரு பெயர்ச்சியும் 3 நாட்கள் நடைபெற்று விழாக்கோலமாக இருக்கும்.

    இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பார்கள். தற்போது கொரோனா தொற்றுநோய் காரணமாக பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இந்தநிலையில் பக்தர்கள் கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ. தாசில்தார் நவநீதகிருஷ்ணன், சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தர், இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் விஜயன், யூனியன் ஆணையாளர்கள் பாண்டியன், சத்தியகலாவதி, வருவாய் ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு யாகசாலை பூஜையில் பங்கேற்க அனுமதி இல்லை. சாமி தரிசனம் செய்ய மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    நேற்று காலை 2-ம் நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இன்று (சனிக்கிழமை) காலை 3-ம் நாள் லட்சார்ச்சனை தொடங்கி பகல் வரை நடைபெறும். பிற்பகல் 3 மணி அளவில் பரிகார பூஜை நடைபெறுகிறது.

    மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய மாலை 6.10 மணி அளவில் குருபகவானுக்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெற்று பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    Next Story
    ×