search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gokulashtami"

    • நாளை (சனிக்கிழமை) உறியடி திருவிழா நடைபெறுகிறது.
    • நாளை மாலை 5 மணிக்கு கண்ணபிரான் வீதி உலா மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பட்டணம் காத்தான் கிராமத்தின் சார்பில் ஆண்டுதோறும் கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்திவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 26-வது ஆண்டு கிருஷ்ணஜெயந்தி விழா கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு காலை 7 மணி அளவில் பால்குடம் ஊர்வலம் நடைபெறுகிறது.

    அப்போது நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பட்டணம் காத்தான் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கண்ணன் கோவிலை வந்தடைவர். அதனை தொடர்ந்து பாமா, ருக்மணி சமேத கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். பின்னர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், அன்னதானம், வானவேடிக்கை மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இரவு 12 மணிக்கு கண்ணபிரானுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. விழாவிற்கு முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்குகிறார். மாவட்ட கவுன்சிலர் வக்கீல் ரவிச்சந்திர ராமவன்னி, யாதவர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன் வரவேற்புரை ஆற்றுகிறார்.

    விழாவில் பட்டணம்காத்தான் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கண்ணன் கோவில் வரை அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு கோலாகலமாக காட்சி அளிக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) உறியடி திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி காலை 7 மணிக்கு பொங்கல் வைபவமும், காலை 10 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு கண்ணபிரான் அழைப்பு, மாலை 3 மணிக்கு உறியடி உற்சவம் நடைபெறுகிறது. இதில் மணிகண்டன் உறியடிக் கிறார். உறியின் கயிறை ஒன்றிய கவுன்சிலர் முருகன் இழுக்கிறார். தேரோட்டியாக கே.பி.எஸ். டிராக்டர் உரிமையாளர் பாலமுருகன் செயல்படுகிறார்.

    அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு கண்ணபிரான் வீதி உலா மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான பூஜைகளை கோவில் அர்ச்சகர் விஜயராகவன் மேற்கொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குகிறார்.

    விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், யாதவர் சங்க தலைவர் வடமலையான், செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெகதீஸ், துணை தலைவர் முருகேசன், துணை செயலாளர் விஜயகுமார், யாதவர் இளைஞர் சங்க தலைவர் பாண்டித் துரை, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் அரவிந்த், துணை தலைவர் விக்னேசுவரன், துணை செயலாளர் கார்த்திக், சங்க ஒருங்கிணைப்பாளர் கவுதம் மற்றும் யாதவர் சங்கத்தினர், யாதவர் இளைஞர் சங்க நிர்வாகிகள், ஸ்ரீ கிருஷ்ணா மகளிர் சேவை குழுவினர் மற்றும் பட்டணம் காத்தான் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • கிருஷ்ணசாமி கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது.
    • கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி பவனி நடந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. மாலையில் தீபாராதனையை தொடர்ந்து கோவிலில் உள்ள உதய மார்த்தாண்ட மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் குழந்தை கண்ணன், பலராமன் ஐம்பொன் விக்கிரகங்கள் வைக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் தொட்டிலை அசைத்து மகிழ்ந்தனர்.

    இரவில் கிருஷ்ணன் கோவிலில் கலச அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதேபோல் அருமனை அருகே உள்ள முழுக்கோடு, கடலிகோடு ஆகிய பகுதிகளில் உள்ள கிருஷ்ணசாமி கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி கடலிகோடு கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி பவனி நடந்தது. பவனி புண்ணியம் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து தொடங்கி முழுக்கோடு வழியாக கடலிகோடு கிருஷ்ணசாமி கோவிலில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்தும், முத்துக்குடையுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணரின் பிறந்தநாளையே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றனர்.
    • எந்த மாதிரியெல்லாம் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம்.

    இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் ஒரு சுவாரஸ்யமான பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாளையே கிருஷ்ண ஜெயந்தியாக இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். தன் வீட்டு குழந்தையின் பிறந்த நாளை எப்படி பெற்றோர்கள் சந்தோஷமாக கொண்டாடுவார்களோ அதே போல் கிருஷ்ணனின் பிறந்தநாளையும் மக்கள் அதே அன்போடும் சந்தோஷத்தோடும் கொண்டாடுகின்றனர் என்றால் மிகையல்ல. எந்த மாதிரியெல்லாம் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம்.

    * கிருஷ்ணன் குழந்தையில் செய்த குறும்புத்தனங்களை எல்லாம் மக்கள் மிகவும் ரசிப்பதுண்டு. அந்த மாதிரி தன்னுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணன் போல வேடமிட்டு அலங்காரம் செய்து பார்த்து மகிழ்வதும் உண்டு.

    * பள்ளிகளிலும் கலை க்கூடங்களிலும், பாட்டு நாட்டியம் போன்ற கலைகளை கற்பிக்கும் இடங்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை தன் மாணவர்களுடன் ஆசிரியர்கள் சேர்ந்து விமர்சியாக கொண்டாடுவதும் உண்டு. இந்த நிகழ்ச்சியின் பொழுது குழந்தைகளுக்கு கிருஷ்ணனைப் போல வேடமிட்டு தலையில் மயில் தோகையினால் ஆன கிரீடங்களை அணிவித்து கையில் புல்லாங்குழல் கொடுத்து ரசிப்பது உண்டு.

    * ஆண் குழந்தை பெண் குழந்தை என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா குழந்தைகளுக்குமே கிருஷ்ணனைப் போல் அலங்கரித்து மகிழ்வார்கள். சிலர் கிருஷ்ணன் கரிய நிறத்தில் இருப்பார் என்பதற்காக குழந்தைகளுக்கு நீல நிறத்தில் வர்ணம் பூசி கிரீடம் வைத்து அதில் மயில் தோகை செருகி, கையில் புல்லாங்குழல் கொடுத்து கண்களுக்கு மையிட்டு கை கால் விரல்களில் மருதாணி தீட்டி அலங்காரம் செய்து ரசிப்பார்கள். ஒரு சிலர் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணனை போலவும் பெண் குழந்தைகளுக்கு ராதையைப் போன்று அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள்.

    * கிருஷ்ணர் ஏன் மயில் தோகையை அணிகிறார் என்பதற்கு ஒரு சுவாரசியமான கதை உண்டு. கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிக்கும் பொழுது மனிதர்கள் மட்டுமின்றி காடுகளில் இருந்த மிருகங்களும் பறவைகளும் மாடு கன்றுகளும் மெய்மறந்து ரசித்ததாக கூறப்படுவதுண்டு. அவ்வாறு மயில்கள் கிருஷ்ணனுடைய புல்லாங்குழலை கேட்டு தோகை விரித்து நடனம் ஆடும் பொழுது அவை உணர்ச்சி மிகுதியால் தங்களுடைய தோகையை கிருஷ்ணரின் காலடியில் சமர்ப்பித்ததாகவும் அதை அன்போடு ஏற்றுக்கொண்டு அந்த தோகையை தன் தலையில் அவர் சூடிக் கொண்டதாகவும் கதைகள் கூறப்படுவதுண்டு. எனவேதான் கிருஷ்ண வேஷம் போடும் குழந்தைகளுக்கு மயில் தோகையை அணிவித்து நாமும் மகிழ்கிறோம்.

    * கிருஷ்ணன் வெண்ணெய் பால் பானைகளை உடைத்து அதிலிருந்த வெண்ணெயை சாப்பிட்டு மகிழ்ந்ததாக கதைகள் கூறப்படுவதுண்டு. அதேபோல் குழந்தைகளுக்கு உரியடி போன்ற விளையாட்டுகளை ஏற்பாடு செய்து உயரத்தில் கட்டி உள்ள மண் பானையில் வெண்ணெயை வைத்து அல்லது வேறு சில பரிசு பொருட்களை வைத்து குழந்தைகள் கம்பை எடுத்து அந்தப் பானைகளை அடித்து உடைக்க வேண்டும். யார் உடைக்கிறார்களோ அவருக்கு அந்த பரிசு என்பது போல் விளையாட்டுக்கள் நடத்தப்படுவதுண்டு.

    * வீடுகளிலும் கோயில்களிலும் பள்ளிக்கூடங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடும் பொழுது ஒவ்வொரு வீட்டு வாசலில் இருந்தும் பூஜை அறை வரையில் கிருஷ்ணன் பாதம் என்று சிறு குழந்தையின் பாதத்தை வரைந்து மகிழ்வதுண்டு. இதை அரிசி மாவு, கலர் சாக்பீஸ், கலர் பொடிகள் கொண்டோ கோலம் போல் தீட்டி மகிழ்வதுண்டு.

    * வீடுகளிலும் பள்ளிகளிலும் மற்ற கலை பள்ளிகளிலும் கிருஷ்ணர் வாழ்ந்த கோகுலத்தை தத்ரூபமாக பொம்மைகளைக் கொண்டு அலங்காரம் செய்வதுண்டு. மாடு கன்றுகள், சிறு குழந்தைகள், தண்ணீர் எடுத்து செல்லும் பெண்கள், குடத்தில் பால் எடுத்து செல்லும் பெண்கள், விவசாயம் செய்யும் பால் கறக்கும் ஆண்கள், குடிசை வீடுகள், மண் வீடுகள், மரங்கள், ஆறுகள் என்று கோகுலத்தில் கிருஷ்ணன் இருந்தது போல் பொம்மைகளைக் கொண்டு வடிவமைத்து அதன் நடுவில் கிருஷ்ணன் புல்லாங்குழலுடன் இருப்பது போன்ற பொம்மையை வைத்து அலங்காரம் செய்து குழந்தைகளுக்கு கிருஷ்ணனின் கதையை கூறி மகிழ்வார்கள்.

    * கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது மற்ற பண்டிகைகளை விட அதிகமான அளவில் குழந்தைகள் விரும்பும் நொறுக்கு தீனிகளையும் இனிப்பு பண்டங்களையும் வீடுகளில் செய்வதுண்டு. லட்டு, மைசூர் பாகு, குலாப் ஜாமுன், அல்வா, ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகளையும், முறுக்கு, சீடை, தட்டை, மிக்சர், ஓமப்பொடி போன்ற கார நொறுக்குகளையும் வீட்டில் செய்வர். அதனுடன் அவல் வெண்ணெய் மற்றும் பழங்களைக் கொண்டு கிருஷ்ணனின் படத்தின் முன் படையல் இட்டு குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடும் பழக்கமும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வாகும்.

    • கிருஷ்ணஜெயந்தி நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் திண்டுக்கல்லில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கோவிலுக்கு வந்தனர்.

    திண்டுக்கல்:

    கிருஷ்ணஜெயந்தி நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் திண்டுக்கல்லில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்திஅன்று வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடுவதும், குழந்தைகளின் கால்தடங்களை பதியவிட்டு வழிபடுவதும், குழந்தைகளுக்கு பிடித்த திண்பண்டங்கள் தயார் செய்து அனைவருக்கும் வழங்குவது வழக்கமாகும்.

    மேலும் தங்கள் வீட்டு குழந்தைகளை கிருஷ்ணர் வேடமிட்டு அழைத்து வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. திண்டுக்கல்லில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு தவழும் கண்ணன், வெண்ணை கண்ணன், பசுகண்ணன் உள்ளிட்ட விதவிதமான சிலைகள் விற்பனைக்கு வந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

    இதேபோல திண்டுக்கல் கே.ஆர்.நகர் ரூபகிருஷ்ணன் கோவிலில் இன்று முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாைவ முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் கிருஷ்ணனின் பாடல்களை பாடியவாறு ஆடி, பாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டதுடன் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    • 20-ந்தேதி உறியடி உற்சவம் நடக்கிறது.
    • உறியடி உற்சவத்திற்காக 20-ந்தேதி ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கோவில் தங்க மண்டபத்தில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தங்க சர்வபூபால வாகனத்தில கிருஷ்ணர் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    உக்கிர ஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றும் கிருஷ்ணருக்கு ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்படுகிறது. 20-ந்தேதி உறியடி உற்சவம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தங்கத்திருச்சியில் மலையப்ப சுவாமியும், மற்றொரு திருச்சியில் கிருஷ்ணரும் மாட வீதிகளில் வலம் வருகிறார்கள். இதற்காக 20-ந்தேதி ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை ‘கோகுலாஷ்டமி’ என்றும் சொல்வார்கள்.
    மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா பிரசித்தமாக நடைபெறும்.

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

    சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும், ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை ‘கோகுலாஷ்டமி’ என்றும் சொல்வார்கள்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    கோகுலாஷ்டமியில் குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை, ‘ராசலீலா’ என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

    கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-வது வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

    கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

    பெண்கள், கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால், திருமண தடைகள் விலகும்.

    ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் ‘ஸ்ரீநாத்ஜீ’க்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்.

    துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு ‘துவாரகீசன்’ என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில், பிரதான வாசலின் பெயர் சொர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைத்தாண்டி சென்றால் ‘மோட்ச துவாரம்’ வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.

    கண்ணனின் லீலைகளை விளக்கும் `கர்பா’ என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம். இது தமிழ்நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபியர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் என்று கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.

    கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து, பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர்.

    குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம், ‘பாதாள அஞ்சனம்’ என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.

    வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.

    மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது அந்த இடத்திற்கு மேல், `கத்ர கேஷப்தேவ்’ என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. 
    ×