search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Florida"

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Shooting
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு துப்பாக்கி லைசென்சுகள்  வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர்

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், புளோரிடா மாகாணத்தின் பனாமா சிட்டியில் அமைந்துள்ளது அடுக்குமாடி குடியிருப்பு. இந்த குடியிருப்பில் நேற்று காலை கெவின் ஹல்ரய்டு (49), என்ற ஆசாமி தனது கையில் இருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுடத் தொடங்கினான்.

    இதையடுத்து, அப்பகுதியில் சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சிலர் எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடம் வந்த நாங்கள், கெவினை மடக்கிப் பிடிக்க முயன்றோம். அவன் துப்பாக்கி சூட்டை நிறுத்தாததால் சுட்டுக் கொன்றோம். அதற்கு பின்னரே அந்த பகுதியில் சகஜ நிலை திரும்பியது என தெரிவித்துள்ளனர். #Shooting #Tamilnews
    அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 38 வயதான நபர் இ-சிகரெட் வெடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
    புளோரிடா:

    அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரை சேர்ந்தவர் டால்மேட்ச் எலியா (38). இவருக்கு சிகரெட் பழக்கம் இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு இவர் தனது படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் 80 சதவீதம் கருகிய நிலையில் இருந்தது.

    படுக்கை அறையில் உடல் கருகி இறந்தது எப்படி, என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இ-சிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூரியபகுதி அவரது மண்டை ஓட்டுக்குள் பாய்ந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    எனவே, அவர் இ-சிகரெட் புகைக்கும் போது அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப்பிடித்து அவர் உயிரிழந்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் 2009 முதல் 2016-ம் ஆண்டுவரை 195 இ-சிகரெட் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 133 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் உயிரிழந்த சம்பவம் தற்போது தான் முதன் முறையாக நடந்துள்ளது. #Tamilnews
    ×