என் மலர்
செய்திகள்

அமெரிக்கா - துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி சுட்டுக் கொலை
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Shooting
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு துப்பாக்கி லைசென்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை போலீசார் சுட்டுக் கொன்றனர்
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், புளோரிடா மாகாணத்தின் பனாமா சிட்டியில் அமைந்துள்ளது அடுக்குமாடி குடியிருப்பு. இந்த குடியிருப்பில் நேற்று காலை கெவின் ஹல்ரய்டு (49), என்ற ஆசாமி தனது கையில் இருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுடத் தொடங்கினான்.
இதையடுத்து, அப்பகுதியில் சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சிலர் எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடம் வந்த நாங்கள், கெவினை மடக்கிப் பிடிக்க முயன்றோம். அவன் துப்பாக்கி சூட்டை நிறுத்தாததால் சுட்டுக் கொன்றோம். அதற்கு பின்னரே அந்த பகுதியில் சகஜ நிலை திரும்பியது என தெரிவித்துள்ளனர். #Shooting #Tamilnews
Next Story






