search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ENGvPAK"

    லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோன்மேன் நீக்கப்பட்டு ஜென்னிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

    2-வது டெஸ்ட் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டோன்மேன் நீக்கப்பட்டு ஜென்னிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. தாவித் மலன், 5. பேர்ஸ்டோவ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. ஜோஸ் பட்லர், 8. பெஸ், 9. மார்க் வுட், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன், 12. கிறிஸ் வோக்ஸ்.

    ஜென்னிங்ஸ் இந்தியாவிற்கு எதிராக மும்பையில் 2016-ல் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் 6 போட்டியில் விளையாடி 294 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 24.50 ஆகும்.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் ஸ்டோன்மேன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்தில் க்ளீன் போல்டானார்.



    அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் (4), தாவித் மலன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.



    தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 70 ரன்கள் அடிக்க 58.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாட இருக்கிறார். #ENGvPAK
    தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுபவர் ஜோ ரூட். அலஸ்டைர் குக் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டனாக விளையாடுவதால், முக்கியமான 3-வது இடத்தில் களம் இறங்குவதை தவிர்த்து 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வந்தார்.

    தற்போது கேப்டனாக பதவி ஏற்று ஒரு வருடம் ஆகிவிட்டதால் கேப்டன் பொறுப்பிற்கான அனுபவம் பெற்றுவிட்டதாக கருதும் ஜோ ரூட், கூடுதல் பொறுப்புடன் 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாட முடிவு செய்துள்ளார்.



    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்டில் இங்கிலாந்து விளையாடுகிறது. இங்கிலாந்து அணியில் களம் இறங்கி விளையாடி வந்த வின்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஜோ ரூட் 3-வது இடத்தில் களம் இறங்குகிறார்.

    இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘3-வது இடத்தில் களம் இறங்கும் வாய்ப்பு எனக்க கொடுக்கப்படுவதால், கொஞ்சம் கூடுதலாக பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது கேப்டன் பதவியை நான் ஏற்று ஒரு வருடம் ஆகிறது. கேப்டன் பதவிக்கான அனுபவத்தை பெற்றுள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.
    ×