search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammad Abbas"

    டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் 11 இடங்கள் முன்னேறி 829 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். #Pakistan #MohammadAbbas #TestRanking
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் 11 இடங்கள் முன்னேறி 829 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    அபுதாபி டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை முடக்கியதன் மூலம் அவருக்கு தரவரிசையில் மிகப்பெரிய ஏற்றம் கிடைத்திருக்கிறது. 800 புள்ளிகளை கடந்த 10-வது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் ஆவார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (899 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் ரபடா (882 புள்ளி) 2-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

    இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5-வது இடத்திலும், அஸ்வின் 9-வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே இந்திய கேப்டன் விராட் கோலி (935 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (910 புள்ளி), நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் (847 புள்ளி) நீடிக்கிறார்கள்.  #Pakistan #MohammadAbbas #TestRanking
    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த முகமது அப்பாஸ் 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 24-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 64 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    8 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து முகமது அப்பாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள முகமது அப்பாஸ் 20-வது இடத்திற்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.



    மேலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது அமிர் மற்றும் ஹசன் அலி ஆகியோரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இங்கிலாந்தை 184 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான். #ENGvPAK
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் ஸ்டோன்மேன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்தில் க்ளீன் போல்டானார்.



    அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் (4), தாவித் மலன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 27 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னும், ஜோஸ் பட்லர் 14 ரன்களும் எடுத்தனர்.



    தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 70 ரன்கள் அடிக்க 58.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், ஹசன் அலி தலா நான்கு விக்கெட்டுக்களும், முகமது அமிர், பஹீம் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    ×