என் மலர்

  செய்திகள்

  பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்- இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் சேர்ப்பு
  X

  பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்- இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ் சேர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோன்மேன் நீக்கப்பட்டு ஜென்னிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvPAK
  இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

  2-வது டெஸ்ட் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டோன்மேன் நீக்கப்பட்டு ஜென்னிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. தாவித் மலன், 5. பேர்ஸ்டோவ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. ஜோஸ் பட்லர், 8. பெஸ், 9. மார்க் வுட், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன், 12. கிறிஸ் வோக்ஸ்.

  ஜென்னிங்ஸ் இந்தியாவிற்கு எதிராக மும்பையில் 2016-ல் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் 6 போட்டியில் விளையாடி 294 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 24.50 ஆகும்.
  Next Story
  ×