search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dismissed"

    ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Sridevi #Sridev #Sridevideath
    பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி, அதன்பின்னர் உடலை ஒப்படைத்தனர்.



    ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. துபாய் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் அம்சம் எதுவும் இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. #Sridevi #Sridev #Sridevideath
    மாணவிகளுக்கு பாலியல் வலைவிரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #AruppukottaiProfessor #NirmalaDevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி கொடுத்த தகவலின்பேரில் பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, நிர்மலா தேவி தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது. #AruppukottaiProfessor #NirmalaDevi #NirmalaDeviCase

    ×