search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dandruff"

    பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும். பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் 5 ஆயுர்வேத குறிப்புகளை பார்க்கலாம்.
    பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும். சிலருக்கு தலைக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், தலைச்சருமத்தில் வெள்ளையாக தோல் உரியும். இதற்கு ஷாம்புவில் உள்ள கெமிக்கல் ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் பசையை முழுமையாக வெளியேற்றிவிடுவது தான் காரணம். மேலும் பொடுகுத் தொல்லை இருந்தால், தலைமுடியின் மேல் வெள்ளை நிறத்தில் தூசி படிந்தது போன்று அசிங்கமாக காணப்படும். ஆனால் ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும் வழிகள் உள்ளது.

    * எலுமிச்சையில் உள்ள அமிலம், ஸ்கால்ப்பில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்கால்ப்பிற்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    * தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் ஓர் அற்புதமான கலவை. இதனைக் கொண்டு ஸ்கால்ப்பை பராமரித்தால், வறட்சி நீங்குவதோடு, கற்பூரத்தில் உள்ள ஆன்டி-பாக்டீயரில் தன்மை ஸ்கால்ப்பில் பொடுகை ஏற்படுத்திய கிருமிகளை அழிக்கும். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதனை இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.



    * ஆயுர்வேதத்தின் படி, வினிகர் பொடுகைப் போக்கும் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வினிகர் ஸ்கால்ப்பை ஈரப்பசையூட்டவும் செய்கிறது. ஒரு கப்பில் சிறிது வினிகரை எடுத்து, அதனை ஒரு பஞ்சு பயன்படுத்தி ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    * வெந்தயம் மயிர்கால்களை வலிமையடையச் செய்வதோடு, ஊட்டமளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மை ஸ்கால்ப்பில் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுத்து, முடி உதிர்வதையும் தடுக்கும். இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

    * மிளகுத் தூளும் ஓர் அற்புதமான பொடுகைப் போட்டும் பொருள். இதில் உள்ள காரத்தன்மை நுண்கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அழித்து, பொடுகு ஏற்படுவதைத் தடுத்து, ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். சிறிது வால் மிளகை பொடி செய்து, நீரில் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
    உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம்.
    உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம். தலைமுடிக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்துவிதமான நோய் தொற்றுகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. பளபளப்பான, மென்மையான கூந்தலை பெறுவதற்கும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பொடுகு பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் தயிருடன், வெந்தயம், எலுமிச்சை சாறு சேர்த்து நிவாரணம் பெறலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தய தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலச வேண்டும். தொடர்ந்து வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.



    பெண்கள் சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து கூந்தலை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கு தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். முதலில் 20 செம்பருத்தி இதழ்களையும், 10 வேப்பிலைகளையும் மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ள வேண்டும் அதனை கூந்தலில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பின்னர் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி வந்தால் கூந்தல் பளபளப்பாக மின்னும்.

    கூந்தல் வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுப்பதற்கும் தயிரை பயன்படுத்தலாம். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக அரைத்து தலா 2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாக பிசைந்து மயிர்க்கால்கள் வரை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவ வேண்டும். 
    ×