search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crash"

    சேதுபாவாசத்திரம் அருகே தனியார் பள்ளியின் பஸ் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    சேதுபாவாசத்திரம்:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சம்பைபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அபுபக்கர். இவருடைய மகன் அகமது இப்ராகீம் (வயது31). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அகமது இப்ராகீம், நேற்றுமுன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நோன்பு திறந்து, தொழுகை முடித்து விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சேதுபாவாசத்திரத்துக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கிழக்கு கடற்கரை சாலையில் சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடா என்ற இடத்தில் சென்றபோது தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மோட்டார்சைக்கிளின் பின்னால் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அகமது இப்ராகீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அகமது இப்ராகீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அகமது இப்ராகீமுக்கு, ரூபியாபேகம் என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு வெளிநாடு செல்ல இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    பல்கேரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் 2 பைலட்கள் பலியாகினர்.
    சோபியா:

    பல்கேரியா நாட்டின் குருமோவோ விமானப் படைத்தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

    தென் பகுதியில் அமைந்துள்ள ப்ளோவ்டிவ் நகரின் மேலே பறந்தபோது ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்தது. 
    இதையடுத்து அது கீழே விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 2 பைலட்களும் பரிதாபமாக பலியாகினர். மேலும், விமான நிறுவன ஊழியர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். விமான விபத்து ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள்  விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். #AirForceHelicopter #JammuKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் நேற்று காலை வழக்கமான ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 விமானிகள் மற்றும் 2 பயணிகள் இருந்தனர்.

    இந்த ஹெலிகாப்டர் நாதாடாப் என்கிற இடத்தில் தரையிறங்க முயன்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இருப்பினும் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. #AirForceHelicopter #JammuKashmir
    ×