search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtesy"

    • சுதந்திர போராட்ட தியாகிகள் சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளை ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    • மணியன் தீவு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் 120 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்புவேதாரணியம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள்ச ர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளைஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதையடுத்து மணியன் தீவு பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், நகர தலைவர் அர்ஜுனன் , முன்னாள் நகர தலைவர் வைரவன் , காங்கிரஸ் நகர பொதுச்செயலாளர் ராகுல் காந்தி,மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ.பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,நகர துணைத்தலைவர் ரபீக், வர்த்தக அணி பொதுச் செயலாளர் அப்துல் உசேன், ஜ.என்டி.யூசி உப்பு தொழிலாளர் சங்க துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன், மகிளா காங்கிரஸ் தலைவர் சத்யகலா, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார மகளிர் அணி தலைவர் மல்லிகா ,நகர மகளிர் அணி தலைவர் ரத்னமாலா, நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை, தகவல் நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் மற்றும் அனைத்து காங்கிரஸ் கட்சிநிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட தலைவர் ச.பாஸ்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் வி.கே.செல்வம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாலபாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாவட்ட துணை தலைவர் ஆர்.சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏ.சி.எஸ்.அறிவுராம், வர்த்தபிரிவு மாநில ெசயலாளர் சிவ.காமராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ராகவன், மாநில செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.கண்ணன், மாவட்ட துணை தலைவர் எஸ்.பானுமதி, நகர தலைவர் ஆர்.ரகுராமன், நகர பொது செயலாளர்கள் கோகுல், எம்.எஸ்.செயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய எருசலேம் ஆலய (சீகன்பால்கு கட்டியது) ஆயரும் மறைமாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார்.
    • தரங்கம்பாடியில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடத்தை அமைத்து தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றினார்.

    தரங்கம்பாடி:

    தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினம் சனியன்று கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் டென்மார்க் அரசரால் அனுப்பப்பட்ட ஜெர்மனி நாட்டு கிறிஸ்தவ மத போதகரான (புராட்டஸ்டாண்டு) சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினத்தையொட்டி தரங்கம்பாடியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு புதிய எருசலேம் ஆலய (சீகன்பால்கு கட்டியது) ஆயரும் மறைமாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார்.

    மாவட்ட கண்காணிப்பு ஆயர் நவராஜ் ஆபிரகாம், பொறையார் பெத்லேகம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன், சீகன்பால்கு ஆன்மீக மன்ற இயக்குநர் ஜஸ்டின் விஜயகுமார், சபை சங்க பொறுப்பாளர்கள், ஆயர்கள், பள்ளி ஆசிரி யர்கள், அலுவலர்கள், ஊழி யர்கள் கலந்துக்கொண்டு மாலை அணிவித்தனர். பின்னர் புதிய எருசலேம் ஆலயத்தினுள் உள்ள சீகன்பால்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி, பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

    முன்னதாக சீகன்பால்கு கப்பலிலிருந்து இறங்கி நின்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவிடத்தில் சிறப்பு வழிபாடும், மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைப்பெற்று பின்னர் பேரணியாக வந்தனர்.222 நாட்கள் கப்பலில் பயணம் செய்து 1706 ஜூலை 09 ல் தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு 1715 ல் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழில் பைபிளை, காகிதத்தில் அச்சடித்து வெளியிட்டார், இந்தியாவிலேயே முதன் முதலாக தரங்கம்பாடியில் அச்சகம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடத்தை அமைத்தார். தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றினார்

    தமிழ் நாள்காட்டியை (காலண்டர்) முதன்முதலில் வெளியிட்டார், ஜெர்மன் மொழியிலான ஞானப்பாடல்களை தமிழில் மொழிப்பெயர்த்தார், தமிழ்நூல்களைஜெர்மன் மொழியில் மொழிப்பெ யர்த்தார், முதன்முதலில் தமிழில் அருளுரையாற்றினார், ஜெர்மனியில் தமிழ் மொழியை வளர்க்க வழிவகுத்தார் என இன்னும் பல்வேறு சாதனைகளை தமிழ்மொழிக்காக செய்த தமிழறிஞர் சீகன்பால்கு வின் தொண்டினை நினைவுகூறும் விதமாக தரங்கம்பாடியில் அவருக்கு மணிமண்டபத்தை கட்டுவதோடு, அவர் வந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் சமீபத்தில் லண்டனில் கண்டுப்பிடிக்கப்பட்ட சீகன்பால்குவால் அச்சடிக்கப்பட்ட பைபிளை தரங்கம்பாடி க்கு கொண்டு வர வேண்டுமென மத்திய, மாநில அரசுக்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சீகன்பால்கு உருவாக்கிய பள்ளியில் சீகன்பால்குவால் உருவாக்கப்பட்ட பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஜான் சைமன் தலைமை வகித்தார். ஆயர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    ×