search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
    X

    மன்னார்குடியில் பா.ஜ.க. சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பா.ஜ.க. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

    • காமராஜர் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட தலைவர் ச.பாஸ்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் வி.கே.செல்வம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாலபாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாவட்ட துணை தலைவர் ஆர்.சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏ.சி.எஸ்.அறிவுராம், வர்த்தபிரிவு மாநில ெசயலாளர் சிவ.காமராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ராகவன், மாநில செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.கண்ணன், மாவட்ட துணை தலைவர் எஸ்.பானுமதி, நகர தலைவர் ஆர்.ரகுராமன், நகர பொது செயலாளர்கள் கோகுல், எம்.எஸ்.செயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×