search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gift items"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
    • இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 பணமும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இந்த துரித தொகுப்பை 10-ந் தேதி தொடங்கி வைத்த அதே நாளில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

    2 கோடியே 19 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் டோக்கன் பெறாத 40லட்சம் பேர் 14-ந் தேதி ரேசன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் டோக்கன் இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டது

    இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுதந்திர போராட்ட தியாகிகள் சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளை ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    • மணியன் தீவு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் 120 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்புவேதாரணியம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள்ச ர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளைஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதையடுத்து மணியன் தீவு பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், நகர தலைவர் அர்ஜுனன் , முன்னாள் நகர தலைவர் வைரவன் , காங்கிரஸ் நகர பொதுச்செயலாளர் ராகுல் காந்தி,மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ.பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,நகர துணைத்தலைவர் ரபீக், வர்த்தக அணி பொதுச் செயலாளர் அப்துல் உசேன், ஜ.என்டி.யூசி உப்பு தொழிலாளர் சங்க துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன், மகிளா காங்கிரஸ் தலைவர் சத்யகலா, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார மகளிர் அணி தலைவர் மல்லிகா ,நகர மகளிர் அணி தலைவர் ரத்னமாலா, நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை, தகவல் நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் மற்றும் அனைத்து காங்கிரஸ் கட்சிநிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×