search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cotton Auction"

    • தொடக்க வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • மொத்தமாக ரூ. 1.35 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் டவுன் திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில், 4,600 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.ஹெச். ரகம் ரூ. 7,002 முதல் ரூ. 9,505 வரையும், சுரபி ரகம் ரூ. 8,850 முதல் ரூ. 9,600 வரையும், மட்ட ரகம் ரூ. 3,010 முதல் ரூ. 6,699 வரையிலும் ஏலம் போனது. மொத்தமாக ரூ. 1.35 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. வியாபாரிகள் தரம் பாா்த்து பருத்தியை கொள்முதல் செய்தனா்.

    • அரசு சார்பில் நடத்தப்பட்ட பஞ்சு ஏலத்தில் விலை குறைவாக எடுக்கப்பட்டதாக கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பருத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட பஞ்சு ஏலத்தில் விலை குறைவாக எடுக்கப்பட்டதாக கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்தில் பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பருத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர். உடனே சம்பவ இடத்திற்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், விற்பனை குழு செயலாளர் சுரேஷ் பாபு, கண்காணிப்பாளர் தாட்சாயினி, துணை கண்காணிப்பாளர் பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் திருக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

    வருகிற வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் ஏலம் நடத்தப்படும் என சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடந்த பருத்தி ஏலமானது மொத்த மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

    அதன் அடிப்படையில் இந்தவாரம் மூலனூர் மற்றும் வேளாம்பூண்டி, சின்னமருதூர், கிளாங்குண்டல், வடுகபட்டி, கன்னிவாடி, பொன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பயிர்செய்த பருத்தியை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.

    இந்த பருத்திகளை வாங்குவதற்காக அன்னூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், புஞ்சைப் புளியம்பட்டி, பல்லடம், கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த வாரம் 247 விவசாயிகள் தங்கள் விளை நிளங்களில் விளைந்த பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

    இந்த வாரத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஆர்.சி.எச் முதல் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலை ரூ.6390-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.4500-க்கும் விற்பனை ஆனது. இந்த வாரம் மொத்த 2632-பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக வந்திருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.

    இந்த தகவலை மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட முதுநிலை செயலாளர் பாலசந்திரன் தெரிவித்தார்.
    ×