search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் சங்கத்தில்  ரூ. 1.35 கோடிக்கு பருத்தி ஏலம்
    X

    வேளாண் சங்கத்தில் ரூ. 1.35 கோடிக்கு பருத்தி ஏலம்

    • தொடக்க வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
    • மொத்தமாக ரூ. 1.35 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் டவுன் திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில், 4,600 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.ஹெச். ரகம் ரூ. 7,002 முதல் ரூ. 9,505 வரையும், சுரபி ரகம் ரூ. 8,850 முதல் ரூ. 9,600 வரையும், மட்ட ரகம் ரூ. 3,010 முதல் ரூ. 6,699 வரையிலும் ஏலம் போனது. மொத்தமாக ரூ. 1.35 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. வியாபாரிகள் தரம் பாா்த்து பருத்தியை கொள்முதல் செய்தனா்.

    Next Story
    ×