search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congestion"

    • பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
    • இட பற்றாக்குறை இருப்பதால் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அவசியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல அடுக்கு நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது.

    இங்கே ஒரே நேரத்தில் 56 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது.

    இந்த பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது.பணி விரைவில் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, நகர வளர்ச்சி மற்றும் வாகனங்களின் பெருக்கம் போன்றவற்றால் ஏற்படும் சாலை நெரிசல்கள் காரணமாக பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதாலும் நெரிசல் ஏற்படுகின்றது.

    இட பற்றாக்குறை இருப்பதால் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அவசியம்.

    இந்த பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும்.

    இதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஓட்டுநர்கள் தங்கள் கார்களை நிறுத்த அங்கு இங்குமாக அலைய வேண்டிய அவசியம் இருக்காது என்றனர்.

    • மணல் காற்றில் பறப்பதால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
    • பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மாதிர வேலூர், பாலுரான்படுகை பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து தினமும் பல லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்கு மணல் எடுத்து செல்லப்படுகிறது.

    அவ்வாறு, மணல் ஏற்றி செல்லும் லாரி, டிராக்டர்கள் பெரும்பாலும் தார்பாய் கொண்டு மூடாமல் மணல் எடுத்து செல்வதால் காற்றில் மணல் பறந்து சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சில இடங்களில் மணல் சாலையில் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுகின்றனர்.

    மேலும், சாலைகளில் கிடக்கும் மணல் காற்றில் பறப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் கண், மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் விபத்துகளும் நடந்து வருகிறது.

    எனவே, மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் கட்டாயம் தார்ப்பாய் கொண்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என குவாரி உரிமையாளர்கள், நிர்வாகிகள், லாரி டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

    அவ்வாறு, தார்ப்பாய் கொண்டு மூடாமல் எடுத்துச் செல்லும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டதால் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் அவதியடைந்தனர்.
    • இந்த ரெயில்வே கீழ்பாலம் 4 முனை சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை காலை முதல் இரவு வரை பணியமர்த்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் 4 ரோடு சந்திப்பில் இன்று 12.30 மணிமுதல் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் 4 சாலைகளிலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டதால் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் அவதியடைந்தனர்.

    மேலும் இந்த ரெயில்வே கீழ்பாலம் 4 முனை சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை காலை முதல் இரவு வரை பணியமர்த்த வேண்டும் என பலரும் கூறினர்.

    நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் அனைவரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • போக்குவரத்து நெரிவல் காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • பாதாள சாக்கடை கழிவு நீர் வந்து கொண்டிருப்பதால் அப்குதியில் யாரும் வசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஆணையர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் முருகன் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது,

    கிருஷ்ணன் தே.மு.தி.க :-

    செம்பனார்கோவில் கடைவீதி பகுதிகளில் பள்ளிகள் விடும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    அதனால் பள்ளிகள் அருகில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர், செவிலியர்கள் யாரும் இருப்பதில்லை.

    சத்தியன் வாய்க்காலில் மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீர் வந்து கொண்டிருப்பதால் அப்குதியில் யாரும் வசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மழை பெய்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் அபாயம் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் சுகாதார பணியை மேற்கொள்ள வேண்டும்.

    சுமதி:-

    பிள்ளைபெ ருமாள் நல்லூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்.

    அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டும்.

    சங்கரபாணி:-

    சேமங்க லம், ஆலவேளி, கருவாழக்கரை, கஞ்சா நகரம் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பயிர்கள் சேதமடைந்து வருகிறது.

    பூவேந்திரன் வடிகால் வாய்க்கால் தூர்வார வேண்டும், மருதூர் நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

    சுப்ரமணியன்:-

    கஞ்சாநகரம் வாய்க்காலி ல் கல்வெட்டு சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும், கன்னிகோயில் தெற்குதெரு சாலை சீரமைக்க வேண்டும்.

    அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

    மைதிலிமகேந்திரன் அ.தி.மு.க. :-

    மேமாத்தூர் கிராமத்தில் காசான்தட்டை சாலை, மேலத்தெரு, வள்ளுவப்புள்ளி சாலை உட்பட பல சாலைகள் சேதமடைந்துள்ளது.

    அவற்றை சீரமைக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொதுநிதியில் இருந்து வேலை கொடுக்க வேண்டும்.

    லட்சுமிபதி:-

    திருவிளை யாட்டம் தாமரைகுளம், கலசம்பாடி கிராம சாலைகள், குமாரமங்கலம் சாலை சீரமைக்க வேண்டும்.

    எழில்தாஸ்:-

    டி.மணல்மேடு கிராமத்தில் காலனித்தெரு பகுதியில் உள்ள குளத்தில் மூன்று புறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படடுள்ளது.

    ஆனால் வீடுகள் இருக்கும் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாததால் வீடுகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    தலைவர் நந்தினிஸ்ரீதர்:-

    ஆக்கூர், செம்பனார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒன்றியத்தில் சேதமடைந்த சாலைகள் குறித்து தெரிவித்துள்ளீர்கள் இது குறித்து பொறியாளர்கள் கொண்டு ஆய்வு செய்து புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் தொழில்நுட்ப அலுவலர் பன்னீர்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    ×