search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student death"

    திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். பேராசிரியர் படுகாயம் அடைந்தார்.

    திருவெண்ணைநல்லூர்:

    சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசபாபு. இவரது மகள் சாய்மானஷா (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பே‌ஷன் டெக்னாலஜி படித்து வந்தார்.

    அதே கல்லூரியில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பென்திலிப் (30) என்பவர் பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று இரவு சாய்மானஷாவும், பென்திலிப்பும் சுற்றுலா செல்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து கேரளா மூணாறுக்கு புறப்பட்டனர். அந்த மோட்டார் சைக்கிள் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அடுத்த அரசூர் பகுதியில் வந்த போது எதிரே வந்த மாட்டு வண்டி மீது திடீரென மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சாய்மானஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பென்திலிப் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பலத்த காயம் அடைந்த பென்திலிப்பை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் லாரி மோதி பலியானர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சின்னஉலகானியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் அருண்குமார் (22). இவர் கப்பலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று நண்பர்கள் ராம்குமார் (19), காளிமுத்து (18) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் அருண்குமார் பாரைபத்தியில் இருந்து திருமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நெடுங்குளம் பகுதியில் சென்றபோது எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அருண்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்து திருமங்கலம் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குன்னம் அருகே குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்றொரு மாணவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லெப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சையது அலி. இவரது மகன் முகமது ரசின் (வயது 18). இவர் சென்னை தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் அபுல் ஹசன் (18) திருச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர்கள் 2 பேர் மற்றும் அவர்களது நண்பர்களான அக்தர் பர்வேஷ் (18), காதர் (18), இம்ரான் (18), இலியாஸ் மகன் அசரப் (18), உமர் (18) அமீர் பாசில் (18) உள்பட 9 பேர் வேப்பூர் அருகே கோவிந்த ராஜபட்டினம் கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் குவாரி குட்டை தண்ணீரில் குளிக்க சென்றனர். இவர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாது.

    இந்த நிலையில் குட்டையில் இறங்கி சுற்றுச்சுவரை பிடித்து கொண்டு அனைவரும் குளித்தனர். இதில் முகமது ரசின், அபுல் ஹசன் ஆகிய 2 பேரும் சுற்றுச்சுவரை பிடித்து குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்தனர்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர். இதைப்பார்த்து பதறிப்போன நண்பர்கள் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதையடுத்து அவர்கள் வந்து தண்ணீரில் குதித்து தேடி பார்த்தனர். ஆனால் 2 மாணவர்களும் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே குன்னம் போலீசாருக்கும், வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரில் மூழ்கிய முகமது ரசின், அபுல் ஹசன் ஆகிய 2 பேரையும் ரப்பர் படகுகளில் தேடினர். இதில் அபுல் ஹசன் உடலை மட்டும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதைபார்த்த சக நண்பர்கள் கதறி அழுதனர்.

    பின்னர் அபுல் ஹசன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் முகமது ரசினை தேடி வருகின்றனர். அவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பரமத்தி வேலூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள காளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் மேனகா (வயது 20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மேனகாவை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். புகாரின் பேரில் பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×