search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess match"

    • காரைக்குடியில் உலக சாதனை நிகழ்வாக 44 மணி நேரம் நடந்த சதுரங்க போட்டி நடந்தது.
    • இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகச்சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உலக சாதனை நிகழ்வாக தொடர்ந்து 44 மணி நேரம் சதுரங்கப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    தமிழக அரசின் சார்பில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்டமான முறையில் நடத்தப்பட உள்ளது. சதுரங்கப் போட்டிகளுக்கு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஆர்வம், விருப்பம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    காரைக்குடியில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளியில் மாவட்ட சதுரங்கக்கழகம், பள்ளி நிர்வாகம் மற்றும் பிரெய்ன் பாக்ஸ் ஆகியவை இணைந்து கடந்த 22-ந் தேதி மாலை 6.45 மணி முதல் நேற்று (24-ந் தேதி) மாலை 2.45 மணி வரை 44 மணி நேரம் இடைவெளி இல்லாமல் சதுரங்கப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் 50 இருக்கைகள் அமைத்து 1 சுற்றிற்கு 100 சதுரங்கப் போட்டி வீரர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 1,437 வீரர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வயது குறியீடு அளவு இல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறந்த நிலை போட்டியாக அறிவிக்கப்பட்டதால், சதுரங்கப்போட்டி வீரர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்றனர்.

    இந்த சதுரங்கப்போட்டி சோழன் உலகச்சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகச்சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்ப ட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சோழன் நிறுவனர் நிமலன் நீலமேகம், ஒருங்கிணைப்பாளர்கள் சேது முத்துக்குமரன், மகேஷ்மணிமாறன், செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி தாளாளர்கள் செல்லப்பன், சத்யன், வட்டாட்சியர் மாணிக்கவாசகம், சிவகங்கை மாவட்ட சதுரங்கக்கழக செயலாளர் கண்ணன், தலைவர் கருப்பையா, பொருளாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆற்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகரமன்ற தலைவர்தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாக்கிபோட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

    இதில் கல்விக் குழு தலைவர் ராஜலட் சுமிதுரை, மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாவைபழனி விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு செஸ் போட்டி நடந்தது சோளிங்கர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

    அந்த போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட சார்பில் மாணவ மாணவிகளை தேர்வு செய்யும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மாவட்ட அளவிலான மாணவ மாணவிகளுக்கு செஸ் போட்டி மாவட்ட ஆட்சித் தலைமையில் போட்டியை துவக்கி வைத்தார்.

    மாவட்டம் முழுவதும் 1462 மன மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் போட்டி கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாவட்ட செஸ் போட்டி நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் மேரிஷெரின் தலைமை தாங்கினார். சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைதத்தார்.

    செஸ் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் இருந்து 196 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் நகர தலைவர் கோபால் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • 230 மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்துகொண்டனர்.
    • திருப்பூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வட்டார அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையோன சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி நடைபெற்றது. பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆனந்தி தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ வரவேற்றார். இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 3 பிரிவுகளில் 120 மாணவிகள், 110 மாணவர்கள் உள்பட 230 மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்துகொண்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற18 மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜகோபால், அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனியன், ஆசிரியர்கள், நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிவில் உடற்கல்வி ஆசிரியர் மருதை நன்றி கூறினார். இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் வரும் 25ம் தேதி திருப்பூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.
    • வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கரவர்த்தி சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு, தலைமை ஆசிரியர் ரவிசங்கர் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கரவர்த்தி சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர், போட்டியில் ஆர்வத்தோடு பங்குபெற்ற மாணவமாணவியர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

    மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பி.சி.செல்வம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கோபிநாத், குணாளன், ரமணி ஆகியோர், வெற்றிப்பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவமாணவியருக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை, உடற்கல்வி இயக்குநர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிமுருகன், ராமமூர்த்தி, செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சதுரங்கப் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.
    • உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாா்வையிட அழைத்து செல்லப்படவுள்ளனா்.

    திருப்பூர்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 ந்தேதி முதல் ஆகஸ்ட் 10ந்தேதி வரையில் 44 -வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு இடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சதுரங்கப் போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

    இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி என 4 பிரிவுகளில் மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டிகள் ஜூலை 14 ந் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிப் பெற்றவா்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (திருப்பூா்), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (அவிநாசி), அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (ஊத்துக்குளி), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (பல்லடம்), கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளி (பொங்கலூர்), மடத்துக்குளம், குடிமங்கலம், காங்கயம், தாராபுரம், குண்டடம், மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளிகள், வெள்ளகோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 13 இடங்களில் நாளை 20-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 25 ந்தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் நபா்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாா்வையிட அழைத்து செல்லப்படவுள்ளனா்.

    • மாவட்ட வருவாய் அலுவலர் ெதாடங்கி வைத்தார்
    • மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி காந்தி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியா போட்டி சென்னையில் நடைபெறுவதையொட்டி மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க கடந்த 15ஆம் தேதி சதுரங்கப் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவியம், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை திருப்பத்தூர் நகரப் பகுதியில் துவக்கி வைத்து தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியானது வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்க வரும் 25ஆம் தேதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்க உள்ளார். மேலும் சதுரங்க போட்டியில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு பின்னர் சென்னையில் நடைபெற உள்ள 44 வது செஸ் ஒலிம்பியா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை நகராட்சி அளவிலான சதுரங்க போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று குத்துவிளக்கு ஏற்றி சதுரங்க விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை துவக்கி வைத்தார்.

    அப்போது செஸ் விளையாட்டு குறித்த வரலாற்றையும், கல்வி மட்டுமே இருக்காமல் கைத்தொழில் ஒன்றை பழகிக்கொள்ள, இதற்காக பள்ளிகளில் நடத்தப்படும் பல்வேறு விதமான சதுரங்கம், தையல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு போட்டியில் வென்று சாதனை படைக்க வேண்டும். மேலும் இவ்வாறு பல்வேறு போட்டிகளில் பங்கு பெற செய்வதால் மாணவர்களின் அவரவர்களின் திறமைகள் வெளியே கொண்டுவரப்படுகிறது. எனவே இந்திய தேசத்தையும் தமிழ்நாட்டையும் தலை நிமிரச் செய்ய பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார். இதனை அடுத்து போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுடன் செஸ் போட்டியை விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மோகனகுமரன், திமுக நகர கழக செயலாளர் ம.அன்பழகன், நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத் தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன், நகராட்சி பொறியாளர் கோபு உட்பட 15 அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும், மாணவ மாணவியர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ×