search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    44 மணி நேரம் நடந்த சதுரங்க போட்டி
    X

    உலக சாதனை நிகழ்வாக 44 மணி நேரம் நடந்த சதுரங்க போட்டியில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி சான்றிதழ் வழங்கினார். 

    44 மணி நேரம் நடந்த சதுரங்க போட்டி

    • காரைக்குடியில் உலக சாதனை நிகழ்வாக 44 மணி நேரம் நடந்த சதுரங்க போட்டி நடந்தது.
    • இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகச்சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உலக சாதனை நிகழ்வாக தொடர்ந்து 44 மணி நேரம் சதுரங்கப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    தமிழக அரசின் சார்பில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்டமான முறையில் நடத்தப்பட உள்ளது. சதுரங்கப் போட்டிகளுக்கு பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஆர்வம், விருப்பம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    காரைக்குடியில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளியில் மாவட்ட சதுரங்கக்கழகம், பள்ளி நிர்வாகம் மற்றும் பிரெய்ன் பாக்ஸ் ஆகியவை இணைந்து கடந்த 22-ந் தேதி மாலை 6.45 மணி முதல் நேற்று (24-ந் தேதி) மாலை 2.45 மணி வரை 44 மணி நேரம் இடைவெளி இல்லாமல் சதுரங்கப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் 50 இருக்கைகள் அமைத்து 1 சுற்றிற்கு 100 சதுரங்கப் போட்டி வீரர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 1,437 வீரர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வயது குறியீடு அளவு இல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறந்த நிலை போட்டியாக அறிவிக்கப்பட்டதால், சதுரங்கப்போட்டி வீரர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்றனர்.

    இந்த சதுரங்கப்போட்டி சோழன் உலகச்சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உலகச்சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்ப ட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சோழன் நிறுவனர் நிமலன் நீலமேகம், ஒருங்கிணைப்பாளர்கள் சேது முத்துக்குமரன், மகேஷ்மணிமாறன், செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி தாளாளர்கள் செல்லப்பன், சத்யன், வட்டாட்சியர் மாணிக்கவாசகம், சிவகங்கை மாவட்ட சதுரங்கக்கழக செயலாளர் கண்ணன், தலைவர் கருப்பையா, பொருளாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×